நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைத் தெரிந்தெடுக்க வேண்டும், இல்லையெனில்...

நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சரியானவற்றைச் சேர்த்தால் மட்டும் போதாது, ஆனால் அவர்கள் சரியான முறையில் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் முக்கியம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 08:10 AM IST
  • நீரிழிவு நோயாளிகள் இந்த தவறை செய்யக்கூடாது
  • உணவை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியம்
  • சரியாக சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன
நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைத் தெரிந்தெடுக்க வேண்டும், இல்லையெனில்... title=

நீரிழிவு மற்றும் முதுமை போன்ற இரண்டு விஷயங்கள், அனைவரும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். உண்மையில் மிகச் சிலரே இதைச் செய்ய முடியும். இந்த இரண்டு விஷயங்களையும் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளது அவை மிகவும் எளிதானது. இவற்றில் ஒன்று சரியான முறையில் சாப்பிடுவது. நீங்கள் சரியான முறையில் சாப்பிட்டு வந்தால் தான் உங்கள் எடையை பெருமளவு குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல், வயதுக்கு ஏற்றாற்போல் இளமையாகவும் காட்சியளிக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள் இந்த தவறை செய்யக்கூடாது
பொதுவாக நாம் உணவுக்குப் பிறகு அல்லது உணவுடன் காய்கறிகள்-சாலட், புரதம் சாப்பிடுவோம். இது ஹார்மோன்களில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதோடு, எடையையும் அதிகரிக்கிறது. அதேசமயம், கார்போஹைட்ரேட்டுகளுக்கு முன் காய்கறிகள்-புரதங்கள் சாப்பிட்டால், அது இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் ஸ்பைக்கை 30-40% குறைக்கிறது. நியூயார்க் நகரத்தில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

சர்க்கரை நோயை காட்டி கொடுக்கும் 2 முக்கிய அறிகுறிகள்

சரியான முறையில் உணவை உண்ணுங்கள்
பல சமயங்களில் சரிவிகித உணவு எடுத்துக் கொண்டாலும் அதன் முழு பலன் கிடைப்பதில்லை. எனவே, உணவுப் பொருட்களை சரியான முறையில் சாப்பிடுவது அவசியம். அதாவது, எப்பொழுதும் காய்கறிகள், சாலட்-பருப்பு போன்றவற்றை உணவின் ஆரம்பத்தில் சாப்பிடுவது சிறப்பானது. 

சரியாக முறையில் சாப்பிடுவதன் நன்மைகள்
கார்போஹைட்ரேட்டுகளுக்கு முன் புரதம் மற்றும் நார்ச்சத்து சாப்பிடும் இந்த முறை பல நன்மைகளைத் தருகிறது. இவ்வாறு சாப்பிடும்போது ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும். கருவுறுதல் சிறப்பாக இருக்கும். மேலும், எடையும் கட்டுப்படுத்தப்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News