குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள்: பெரும்பாலும் குளிர்காலத்தில் நீரிழிவு பிரச்சனை அதிகரிக்கிறது. ஆகையால், நீரிழிவு நோயாளிகள் இந்த பருவத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த பருவத்தில் ஏற்படும் மாற்றத்தால், இரத்த சர்க்கரை அளவில் அதிக மாற்றம் காணப்படுகிறது. இந்த பருவ நிலையில் அதிக பிரச்சனை ஏற்படாமல் இருக்க, உணவில் சிறிய மாற்றங்களைச் செய்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். பல பருவகால உணவுகள் இந்த பருவத்தில் வருகின்றன. அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த சீசனில் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், கண்டிப்பாக இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த உணவுகள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகின்றன
வெந்தயம்
வெந்தயம் சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் நல்லதாக கருதப்படுகிறது. இதில் ஒரு சிறப்பு வகை அமினோ அமிலம் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கு எதிரான தனிமமாக செயல்படுகிறது. இது இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. பல ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் அழுத்தத்தை குறைக்கிறது. இது தவிர, இலவங்கப்பட்டை குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இரண்டின் அளவையும் இயல்பாக வைத்திருக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் பிற நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது.
மேலும் படிக்க | Weight Loss Tips: கொலஸ்ட்ராலை எரித்து உடல் பருமனைக் குறைக்க உதவும் பழச்சாறுகள்
தினை
மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது தினைகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாகவும் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். உணவில் தினை கொண்டு செய்யப்ட்ட வகைகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.
கீரை
இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக கீரை கருதப்படுகிறது. இதில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. கீரையில் உள்ள பொட்டாசியம் இதய நோய்கள் தொடர்பான அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த சூப்பர்ஃபுட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வேலை செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவற்றை உங்கள் உணவில் சேர்க்கலாம்.
பீட்ரூட்
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரையை குறைக்கவும், உடலில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நெல்லிக்காய் (ஆம்லா)
நெல்லிக்காயில் குரோமியம் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இதில் காணப்படுகின்றன. ஆகையால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
கேரட்
சர்க்கரை நோயாளிகளுக்கு கேரட் மிகவும் நன்மை பயக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு சிறப்பு வகை நார்ச்சத்து இதில் காணப்படுகிறது. மேலும், இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடற்பயிற்சி எதுவுமே வேண்டாம்! இதை மட்டும் செஞ்சா போதும்! தொப்பையை குறைக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ