சிலருக்கு பிரச்சனையாய் அமையும் இஞ்சி பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் இஞ்சி நுகர்வு சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Updated: Dec 3, 2019, 11:20 PM IST
சிலருக்கு பிரச்சனையாய் அமையும் இஞ்சி பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் இஞ்சி நுகர்வு சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உடலை சூடாக வைத்திருப்பதைத் தவிர, குளிர், இருமல், தொண்டை புண் போன்றவற்றில் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இஞ்சி நுகர்வு சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சிலருக்கு ஆபத்தானது. இந்த செய்தியில், எந்த மக்களுக்கு இஞ்சி ஆபத்தானது, அவர்கள் ஏன் இஞ்சியை பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

கர்ப்ப காலத்தில் இஞ்சியிலிருந்து விலகி இருங்கள்: கர்ப்ப காலத்தில், பெண்கள் இஞ்சியிலிருந்து விலகி இருக்க வேண்டும். காரணம் இயல்பான காலங்களில் இஞ்சி நுகர்வு உடலுக்கு ஆரிக்கியமான ஒன்றாக உள்ளது, ஆனால் உங்களுக்கு மாதவிடாய் மூன்று மாதம் தள்ளிச்செல்லும் பட்சத்தில் இஞ்சி நுகர்வு உங்கள் கர்பத்தினை பாதிக்கும் என்பதை மறவாதீர்.

தவறாமல் மருந்துகளை உட்கொள்பவர்கள்: ஏதேனும் ஒரு நோயினாலும் தவறாமல் மருந்துகளை உட்கொள்பவர்கள், இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளில் உள்ள பீட்டா-பிளாக்கர்கள், ஆன்டிகோகுலண்டுகள் மற்றும் இன்சுலின் போன்ற மருந்துகள் இஞ்சியுடன் சேர்ந்து ஆபத்தான கலவையை உருவாக்குகின்றன.

இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள்: இரத்தக் கோளாறுகள் இருப்பதாக புகார் உள்ளவர்கள் இஞ்சியிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியை உட்கொள்வது இரத்தத்தை மெல்லியதாக ஆக்குகிறது. லேசான காயத்தில் கூட சிலருக்கு அதிக இரத்த ஓட்டம் இருப்பதற்கு இதுவே காரணம்.

இஞ்சியின் வேறு சில நன்மைகளுயும் நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்... 

  • Vitamin B - நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
  • Vitamin C - ஆண்டிஹிஸ்டமின்களைச் செய்கிறது, புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான போராட்டத்தில் உடலின் சக்திகளை ஆதரிக்கிறது.
  • Vitamin E - நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது, அல்சைமர் நோய் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகளை பலவீனப்படுத்துகிறது, ஹீமாடோபாயிஸ் அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் காயங்கள் மற்றும் வெட்டுக்களை விரைவாக குணப்படுத்துகிறது, மேலும் வயது மூப்பு  செயல்முறையை குறைக்கிறது.
  • Vitamin K - இரத்த உறைதல் செயல்முறையை மேம்படுத்துகிறது, உட்புற இரத்தப்போக்கின் வேகத்தை குறைக்கிறது, சிறுநீரகம், கணையம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • கால்சியம் - எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.
  • இரும்பு - முழு உடலின் ஆக்ஸிஜனேற்றத்திற்கும், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, மன செயல்முறைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு மேம்படுத்த உதவுகிறது.
  • மெக்னீசியம் - இதய தசையின் வேலையை ஆதரிக்கிறது.
  • பொட்டாசியம் - மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ஒவ்வாமை எதிர்வினைகளை குறைக்கிறது, சாதாரண அழுத்தத்தை பராமரிக்கிறது.