தைராய்டு பிரச்சனையால் மாதவிடாய் காலத்தில் பாதிப்பு ஏற்படுமா?

Thyroid Harmone:எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மன அழுத்தம், இவை அனைத்தும் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையற்ற ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 15, 2023, 02:37 PM IST
  • மாதவிடாய் சரியாக இருக்க, தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பது அவசியமாகும்.
  • தைராய்டு சுரப்பி இனப்பெருக்க உறுப்புடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது.
  • தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்பட்டால், இனப்பெருக்க அமைப்பிலும் பிரச்னை ஏற்படும்.
தைராய்டு பிரச்சனையால் மாதவிடாய் காலத்தில் பாதிப்பு ஏற்படுமா? title=

தைராய்டு ஹார்மோனில் மாற்றம் ஏற்பட்டால், பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். தைராய்டு ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தைராய்ட் ஹார்மோன் மாதவிடாய் காலத்தையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மன அழுத்தம், இவை அனைத்தும் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையற்ற ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படுகின்றன.

தைராய்டு சுரப்பி இனப்பெருக்க உறுப்பு மீது நேரடி விளைவை ஏற்படுத்க்துகின்றது

மாதவிடாய் சரியாக இருக்க, தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பது அவசியமாகும். தைராய்டு சுரப்பி இனப்பெருக்க உறுப்புடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்பட்டால், இனப்பெருக்க அமைப்பிலும் பிரச்னை ஏற்படும். அதனால்தான் இது கருப்பைகள் மற்றும் ஹார்மோன்களில் நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குழந்தையின்மை பிரச்சனை தொடங்குகிறது. ஆகையால் பெண்களுக்கு தைராய்ட் பிரச்சனை வந்தால் அதை தவறுதலாக கூட புறக்கணிக்கக்கூடாது.

தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்பட இவை காரணங்களாக இருக்கலாம்

- தைராய்டு ஹார்மோன் TSH இன் அதிகரிப்பு காரணமாக, அதன் நேரடி தாக்கம் புரோலேக்டின் ஹார்மோனில் இருக்கலாம்.

- ப்ரோலாக்டின் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனையும் இது ஒரு அளவில் பாதிக்கிறது.

- TSH இன் அதிகரிப்பு காரணமாக, ப்ரோலாக்டின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது, அதன் பிறகு மாதவிடாய் தொந்தரவு ஏற்படுகிறது.

- தைராய்டு ஹார்மோன் காரணமாக, புரோலேக்டின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது, இதன் காரணமாக அண்டவிடுப்பின் (ஓவ்யுலேஷன்) மற்றும் மாதவிடாய் சுழற்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால், மாதவிடாய் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் மெதுவாகவோ அல்லது கனமாகவோ இருக்கலாம்.

மேலும் படிக்க | தேனையும் அதிகமா சாப்பிட்டால் ஆபத்துதான்... அதிர்ச்சியளிக்கும் பக்க விளைவுகள் இதோ

தைராய்டு சுரப்பியால் இந்தப் பிரச்சனைகள் வரலாம்

தைராய்டு சுரப்பியில் தொந்தரவுகள் காரணமாக கருவுறாமை பிரச்சனை ஏற்படலாம். தைராய்டு எவ்வளவு அதிகமாகவோ (ஓவர் ஆக்டிவ்) அல்லது குறைவாகவே (அண்டர் ஆக்டிவ்) இருந்தாலும், அது பெண்களின் கருவுறுதலைப் பெரிதும் பாதிக்கிறது. இந்த சுரப்பியின் காரணமாக சில பெண்களின் மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடும். தைராய்டு சுரப்பியை நன்றாக அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியமாகும். 

உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்ளுங்கள்:

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை கட்டுப்படுத்துகிறது. காய்கறிகளை சமைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தைராய்டு சுரப்பியால் சிலருக்கு கை, கால்கள் குளிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் வினிகரை உட்கொள்ளுங்கள்: 

தைராய்டு நோயாளிகள் தங்கள் உணவில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்ள வேண்டும். இதனால் தைராய்டு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைக்கிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. ஆப்பிள் வினிகரை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பலன் கிடைக்கும்.

மஞ்சளை உட்கொள்ளவும்: 

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், தைராய்டை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாலுடன் மஞ்சளைப் பயன்படுத்தினால், தைராய்டு கட்டுப்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குண்டு குண்டா இருக்குற தொப்பை குறையுமா? இந்த பச்சை இலை போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News