ஷேவிங் செய்யும்போது செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்

உடலில் உள்ள ரோமங்களை எடுப்பதற்கு பலர் ஷேவிங் முறையை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதில் அலட்சியமாகவும் இருக்கின்றனர்.இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. 

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 07:32 PM IST
  • ஷேவிங் செய்யும்போது செய்யக்கூடியவையும், செய்யக்கூடாதவையும்
  • ஷேவிங் செய்பவர்களுக்கு டிப்ஸ்
 ஷேவிங் செய்யும்போது செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும் title=

உடலில் உள்ள ரோமங்களை எடுப்பதற்கு பலர் ஷேவிங் முறையை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதில் அலட்சியமாகவும் இருக்கின்றனர்.இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. 

அந்த அசம்பாவிதங்களை தடுப்பதற்கு ஷேவிங் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளும், செய்யக்கூடாதவைகளின் விவரம் பின்வருமாறு

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

ஷேவிங் செய்வதற்கு முன்பு சருமத்தை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். இது  சருமம் சேதமடையாமல் பாதுகாக்கும். மேலும் சரும மேற்பரப்பிலுள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களையும் அகற்றுவதற்கு வழிவகுக்கிறது.

Shaving

குறைந்த அளவிலான நீளமுடைய முடிகளை ஷேவ் செய்வது எளிது. எனவே ஷேவிங் செய்வதற்கு முன்பு ட்ரிம்மரை வைத்து முடியின் நீளத்தை குறைத்து பிறகு ஷேவ் செய்வது சிறந்த முறையாகும்.

ஷேவிங் செய்தவுடன் உடனடியாக மாஸ்சரைசர் தடவ வேண்டும். இது சருமம் வறண்டுபோகாமல் இருக்கவும், தடிப்புகள், அரிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Health Tips: தக்காளியின் நோய் உருவாக்கும் பக்கம்: தக்காளியால் இவ்வளவு பிரச்சனையா

செய்யக்கூடாதவை:

அழுக்கான மற்றும் கூர்மையில்லாத ஷேவிங் ரேசர்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் தொற்றுகள் மற்றும் காயத்தை சருமத்தில் ஏற்படலாம்.

பிறர் பயன்படுத்திய பிளேடுகளையோ ரேசர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவ எளிய வழி உருவாகிறது.

வறண்ட சருமத்தை ஷேவிங் செய்வதை தவிர்த்தல் நலம். அதேபோல் அவர்கள்  ஷேவிங் ஜெல் பயன்படுத்தாவிட்டால் சருமம் மேலும் வறண்டு சருமத்தில் அரிப்பு ஏற்படும்.

மேலும் படிக்க | கோடை காலத்தில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்?... விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News