குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உலர் பழம் முந்திரி பருப்பு. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால் பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. பலருக்கு முந்திரி பருப்பு கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், முந்திரி இதயத்திற்கு நன்மை பயக்கும். முந்திரி பருப்பை அளவாக உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இது தவிர, உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் வெகுவாக குறைகிறது. எனவே, முந்திரி பருப்பை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மையை தான் கொடுக்கும்.
முந்திரியில் புரதங்கள், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது. இதில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, முந்திரியில் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன, அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு (Health Tips) அவசியமானவை.
முந்திரியில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. எனவே மனநிலையை மேம்படுத்தவும், மூளையை சுறுசுறுப்பாக வைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும், முந்திரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதனை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. எலும்புகளை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட் அமுந்திரி பருப்பு வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.
மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்
முந்திரியை உணவில் சேர்க்க சிறந்த வழிகள்
1. முந்திரியை டீயுடன் சிற்றுண்டியாக பரிமாற, எண்ணெய் பயன்படுத்தாமல் ஏர் பிரையரில் வறுத்து படயன்படுத்துவது சிறந்தது. பிறகு அதே போல் வேர்க்கடலையை வறுத்து இரண்டையும் கலந்து உப்பு, கருப்பு மிளகு, சாட் மசாலா சேர்த்தால் சுவையான சிற்றுண்டி தயார். வேர்க்கடலைக்கு பதிலாக முலாம்பழம் விதைகளையும் சேர்க்கலாம்.
2. முந்திரியை மூன்று-நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் பேஸ்ட் செய்து, க்யூப்ஸ் வடிவில் உறைய வைத்துக் கொள்ளலாம். சாப்பத்திக்கான சைட் டிஷ் ஆக ஷாஹி பனீர், ஷாஹி ஆலு, பாலக் பனீர், தால் மக்கானி போன்றவற்றை தயார் செய்யும் போது, அளவுக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு க்யூப்ஸ் சேர்க்கலாம். உறைந்த முந்திரி விழுது 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். ஆனால், நேரம் இருந்தால், பிரெஷ்ஷாக அரைப்பது சேர்ப்பது இன்னும் சிறந்தது
3. முந்திரி பருப்பை மிக லேசாக வறுத்து பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு, லட்டு, மில்க் ஷேக் செய்யும் போது, கொஞ்சம் முந்திரி பொடி செய்து கலந்தால், சுவையோடும, ஆரோக்கியமும் கிடைக்கும்
4. சாலடுகள் மற்றும் சூப்கள் போன்றவற்றில் சிறிய முந்திரி துண்டுகளை தூவுவதன் மூலம் டயட்டில் சேர்க்கலாம். சாலட்டை பரிமாறும் முன், அதில் வறுத்த முந்திரியைச் சேர்த்தால், சுவை கூடும்.
5. பிஸ்கட் பேக்கிங் செய்யும் போது, அதில் சிறிது முந்திரி தூள் மற்றும் சில நறுக்கிய முந்திரிகளையும் சேர்க்கலாம். பிஸ்கட் மிகவும் சுவையாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ