வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். வைட்டமின் டி நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனாகும். வைட்டமின் டி என்பது கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. , இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக்கூறுகளாகும்.
வைட்டமின் டி பெற என்ன வழிகள்:-
* சூரிய ஒளி 3 மணி நேரம் நம் உடலில் பட்டால் போதுமான வைட்டமின் டி கிடைக்கும்.
* வைட்டமின் டி-யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால் எலும்பு முறிவுகள், இரத்த அழுத்தம் போன்றவை தவிர்க்கலாம்.
* பால் மற்றும் பால் பொருட்கள், காலை உணவுக்கான தானிய வகைகள் போன்றவை உண்டால் நமது உடலில் உண்டாகும் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்கலாம்.
* தினமும் மீன் உட்கொண்டால், வைட்டமின் டி குறைப்பாடு வராமல் தவிர்க்கலாம்.
* முட்டையின் மஞ்சள் கரு, மாட்டு ஈரல் மற்றும் சீஸ் போன்றவற்றிலும் வைட்டமின் டி அதிகம் இவை நாம் உண்டால் வைட்டமின் டி குறைப்பாடு வராமல் தவிர்க்கலாம்.