India National Cricket Team Latest News Updates: இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) வரும் வெள்ளிக்கிழமை (நவ. 22) அன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் (Perth Optus Stadium) நடைபெறுகிறது. தற்போது இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக, பெர்த் நகரில் உள்ள WACA மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய ஏ அணி வீரர்களுடன், இந்திய அணி (Team India) வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று பயிற்சிகள் தொடங்கிய நிலையில், இரு அணிகளும் சேர்ந்து கடந்த வெள்ளி முதல் விளையாடி வருகின்றனர். இதில், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் கேஎல் ராகுல் (KL Rahul) முதல் நாளில் காயமடைந்து வெளியேறியிருந்தார். இருப்பினும் அதில் இருந்து அவர் மீண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
தொடரும் காயங்கள்...
கேஎல் ராகுல் காயத்தால் கவலைப்பட தேவையில்லை என இந்திய வீரர்கள் நினைத்து வந்த நேரத்தில் சுப்மான் கில்லுக்கு காயம் (Shubman Gill Injury) ஏற்பட்டுள்ளது. பீல்டிங்கின் போது அவருக்கு கை கட்டவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், குணமடைய இரண்டு வாரங்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | ருதுராஜ் வேண்டாம்! இந்த தமிழக வீரரை ஆஸ்திரேலியாவில் இருக்க சொன்ன பிசிசிஐ!
இதனால், அவர் பெர்த்தின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. இதனால், தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), சாய் சுதர்சன் (Sai Sudharsan) ஆகியோரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைக்குள் அவர்களில் ஒருவர் பிரதான அணிக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் வரிசையாக காயமடைந்து வந்த நிலையில், தற்போது அது இந்த சீசனிலும் தொடர்கிறது.
வருகிறார் ரோஹித் சர்மா...
இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான தகவல் வந்திருக்கிறது எனலாம். ரோஹித் சர்மா (Rohit Sharma) தனக்கு மகன் பிறந்திருப்பதால் முதல் டெஸ்ட் போட்டியை தவறவிடுகிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து இந்திய அணியுடன் இணைந்துகொள்வார் எனலாம். முதல் டெஸ்ட் போட்டி நவ. 26ஆம் தேதி நிறைவடையும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி தொடங்குகிறது. இடையில், Prime Minister's XI அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.
ரோஹித்துடன் வருகிறார் ஷமி...
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு (Team Australia) இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும்போது, அவருடன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் (Mohammed Shami) உடன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுசார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டுக்கு பின்னர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷமி, ரஞ்சி கோப்பை தொடரில் வங்காள அணி சார்பில் மத்திய பிரதேசம் அணியை எதிர்த்து விளையாடியிருந்தார். இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது உடற்தகுதியை நீருபித்துள்ளார் எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ