Health Alert! Tomato Ketchup அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம்..!!

சாண்ட்விச் அல்லது பிரட், சமோஸா என எதுவாக இருந்தாலும், தக்காளி கெட்ச்அப் இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2021, 04:30 PM IST
Health Alert! Tomato Ketchup அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம்..!! title=

Side effects of Tomato Ketchup: குழந்தைகள் தக்காளி கெட்சப்பை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். சாண்ட்விச் அல்லது பிரட் (Bread), சமோஸா என எதுவாக இருந்தாலும், தக்காளி கெட்ச்அப் இருந்தால் தான் சுவையாக இருக்கும். அது மட்டுமல்ல, சில குழந்தைகளுக்கு தென்னிந்திய உணவுகளான தோசை, இட்லி போன்ற உணவு வகைகளுக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடும் வழக்கம் உள்ளது. 

ஆனால் தக்காளி கெட்சப் மிக அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தக்காளி கெட்சப் மிக அதிக அளவில் சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்

உடல் பருமன் (Obesity)- தக்காளி கெட்சப்பில் அதிக ப்ரூக்டோஸ் (Fructose) இருப்பது உடல் பருமனை அதிகரிக்கிறது. அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இன்சுலின் அளவைக் குறைக்கிறது.

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

சிறுநீரக பிரச்சனை (Kidney Problem) - தக்காளி கெட்சப்பை அதிகமாக எடுத்துக் கொள்வதால்,  சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கிறது, இது நமது சிறுநீரகத்தை பாதிக்கிறது. இது சிறுநீரக கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

அமிலத்தன்மை (Acidity)- தக்காளி கெட்ச்அப் அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், அதனால் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஒவ்வாமை (Allergies) - தக்காளி கெட்சப்பை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஒவ்வாமை ஏற்படலாம், ஏனெனில் கெட்சப்பில் ஹிஸ்டமைன்ஸ் (histamines) ரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளது.

ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News