Blood Transfusion: இரத்தத்தை யாரு யாருக்கு குடுக்கக்கூடாது? உயிர் காக்கும் உண்மைகள்

Facts About Blood : இரத்தம் தொடர்பான முக்கிய விஷயங்கள்.. உடலின் ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற புரதம் குறைவதால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2024, 03:23 PM IST
  • ரத்த சிவப்பணுக்களில் புரதம்
  • ஹீமோகுளோபின் என்ற புரதம்
  • இரத்தசோகை நோய் ஏற்பட காரணமாகும் புரதம் எது?
Blood Transfusion: இரத்தத்தை யாரு யாருக்கு குடுக்கக்கூடாது? உயிர் காக்கும் உண்மைகள் title=

நமது உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது. உடலில் இரத்த அளவு குறையும்போதோ அல்லது ரத்த அணுக்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்போதோ உடல் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் உடல் இயக்கத்தைச் சீராக்க தேவையான இரத்தம் ஒருவருக்கு செலுத்தப்படுகிறது. பொதுவாக தானமாக பெறப்படும் இரத்தம், தேவைப்படுபவர்களுக்கு ஏற்றப்படுகிறது. இரத்தம் செலுத்தும்போது எந்தவிதமான நோய்க் கிருமிகளும் இருக்கக்கூடாது என்பது அவசியம்.

எந்த ஒரு நோயையும் வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. நமது உடலில் இரத்தத்தின் அளவை சீராக வைத்துக் கொள்ள, நமது உணவுமுறை சீரானதாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்டால், இரத்தசோகை போன்ற பிரச்சனைளும் வராது.

உடலின் ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற புரதம் குறைவதால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது. 
நமது அன்றாட உணவில், கீரை வகைகள், பீட்ரூட், பேரீச்சம்பழம் ஆகிய இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் இரத்தம் போதுமான அளவு உடலில் உற்பத்தியாகும். 

மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!

இரத்த வகைகள்
இரத்தத்தின் நிறம் சிவப்பு என ஒரே வண்ணமாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான இரத்த வகை (blood group). O+, O-, A+, A-, B+, B-, AB+, AB- என இரத்த வகைகள் எட்டு வகைப்படும். ஒவ்வொரு இரத்த வகையும் வெவ்வேறுவிதமான  பண்புகளைக் கொண்டிருக்கும்.

ரத்தம் தானமாக கொடுக்கப்பட்டாலும், அவரவருக்கு ஏற்ற வகை இரத்தம் மட்டுமே கொடுக்க முடியும். எந்த பிளட் குரூப்பினருக்கு எந்த குழு இரத்தம் பொருந்தும் என தெரிந்துக் கொள்வோம்.

0 வகை இரத்தம் : அனைவருக்கும் இரத்தம் கொடுக்க முடியும் ஆனால் 0 குரூப் இரத்தம் மட்டுமே பெற முடியும்  

O+ ​வகை இரத்தம்: இவர்கள் AB+, A+, B+, O+ ஆகிய குழுக்களுக்கு இரத்தம் கொடுக்கலாம் ஆனால் 0- மற்றும் 0+ நபர்களிடமிருந்து மட்டும் தான் இரத்தத்தைப் பெறலாம்.

மேலும் படிக்க | மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க, நிச்சயம் உதவும்

A- வகை இரத்தம் : ஏ வகை ரத்தம் உள்ளவர்கள் AB-, AB+, A+, A- க்கு இரத்தத்தைக் கொடுக்கலாம் ஆனால் A- மற்றும் A+ இலிருந்து மட்டுமே இரத்தத்தைப் பெறலாம்.

A+ வகை இரத்தம் :  A+ மற்றும் AB+ க்கு இரத்தம் கொடுக்கலாம், ஆனால் 0-, 0+ A- மற்றும் A+ இலிருந்து மட்டுமே இரத்தத்தைப் பெறலாம்.

B- வகை இரத்தம் : இந்த இரத்தம் கொண்டவர்கள், B-, B+, AB-, AB+ க்கு இரத்தத்தைக் கொடுக்கலாம், ஆனால் 0- மற்றும் B- இலிருந்து மட்டுமே இரத்தத்தைப் பெறலாம்.

B+ வகை இரத்தம் : B+, AB+ க்கு இரத்தத்தைக் கொடுக்கலாம், ஆனால் O-, O+, B- மற்றும் B+ ஆகியவற்றிலிருந்து இரத்தத்தைப் பெறலாம்.

AB- வகை இரத்தம் : AB-, AB+ க்கு இரத்தம் கொடுக்கலாம், ஆனால் O-, A-, B- மற்றும் AB- ஆகியவற்றிலிருந்து மட்டுமே இரத்தத்தைப் பெறலாம்.

AB+ வகை இரத்தம் : AB+ நபர்களுக்கு மட்டுமே இரத்தம் கொடுக்க முடியும், ஆனால் அனைவரிடமிருந்தும் இரத்தத்தைப் பெற முடியும்.

மேலும் படிக்க | Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News