காலை வேளையில் காலி வயிற்றில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?

நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 1, 2021, 03:43 PM IST
  • சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.
  • மக்கள் பெரும்பாலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வார்கள்.
  • தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
காலை வேளையில் காலி வயிற்றில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?

காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவாகும். காலை உணவு அதற்கு முந்தைய இரவின் உண்ணாவிரதத்தை உடைக்கிறது. இது உங்கள் ஆற்றல் நிலைகளையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

பல ஆய்வுகள் காலை உணவை (Breakfast) சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைக் எடுத்துக் காட்டுகின்றன. இது உங்கள் கவனம் செலுத்தும் திறனையும் மேம்படுத்துகிறது.

உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள போதிலும் பலர் பல காரணங்களுக்காக இதை அடிக்கடி தவிர்க்கிறார்கள். அப்படி செய்வது தவறாகும்.

காலையில் எழுந்தவுடன் பெரும்பாலும் நம் அனைவருக்கும் பசி எடுப்பது சகஜம். சிலருக்கு இந்த பசி மிக அதிகமாகவே இருக்கும். ஆனால், நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

காலி வயிற்றுக்கு பேரிக்காய் நல்லதல்ல

பேரிக்காயில் நார் சத்து உள்ளது. நாம் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ​​அது மென்மையான சளி சவ்வை சேதப்படுத்தும்.

சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது

சிட்ரஸ் பழங்களில் பழ அமிலம் உள்ளது. அவற்றை வெற்று வயிற்றில் சாப்பிடும்போது, ​​வாயு பிரச்சினைகள் ஏற்படும்.

வெறும் வயிற்றில் காபி / டீ வேண்டாம்

வெறும் வயிற்றில் காபி (Coffee) அல்லது தேநீர் உட்கொள்வது நாள் முழுவதும் உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் அஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பானங்கள் உணவை ஜீரணிக்க தேவையான பித்தம் மற்றும் அமிலத்தை குறைக்கின்றன.

ALSO READ: Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!

காலி வயிற்றில் வாழைப்பழத்தை உண்ணக் கூடாது

மக்கள் பெரும்பாலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை (Banana) உட்கொள்வார்கள். வாழைப்பழங்கள் சூப்பர்-ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இது பசியை அமைதிப்படுத்துகிறது. செரிமானத்திற்கு நல்லது. வாழைப்பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

இதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ​​அது நம் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.

வெறும் வயிற்றில் பச்சையாக தக்காளியை உட்கொள்ள வேண்டாம்

தக்காளியில் (Tomato) வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் வெறும் வயிற்றில் இதை உண்பதை தவிர்க்க வேண்டும். தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது உங்கள் வாயு பிரச்சினைகளையும் அதிகரிக்கும்.

காலை எழுந்தவுடன் சாப்பிட ஏற்ற உணவுப்பொருட்கள் இவை:

-மிதமான சூடுள்ள தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடலாம்

-ஊறவைத்த பாதாம் பருப்பு

-தர்பூசணி

-பப்பாளிப் பழம்

-உலர்ந்த திராட்சை

ALSO READ: Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News