Heart Health: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த பழக்கங்களுக்கு NO சொல்லுங்க

இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம்  இதன் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2022, 04:54 PM IST
  • மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம்.
  • இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
  • மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க செய்ய வேண்டியவை
Heart Health: மாரடைப்பு  அபாயத்தை அதிகரிக்கும் இந்த பழக்கங்களுக்கு NO சொல்லுங்க title=

இன்றைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் மாரடைப்பும் ஒன்று. இதய நோய்கள் பொதுவாக வயதானவர்களின் பிரச்சனையாகக் கருதபட்ட காலம் மலை ஏறி விட்டது. கடந்த சில ஆண்டுகளில், இளைஞர்கள் கூட இந்த தீவிர நோய்க்கு அதிகளவில் பலியாகின்றனர். கடந்த ஆண்டு நடிகர் சித்தார்த் சுக்லா, பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதன் மூலம் இதன் அபாயத்தை உணர்ந்து கொள்ளலாம்.

மாரடைப்பு  ஏற்படுவதற்கான காரணம்

இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.  இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம் இதுபோன்ற சில செயல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தினமும் செய்து வருகிறோம், அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, இதைப் பற்றி அனைவரும் தெரிந்துகொண்டு அதைத் தடுப்பது அவசியம். நமது பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். அவற்றைப் பற்றி கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

1. எடையை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது

இன்றைய வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் உடல் பருமன் அல்லது அதிக எடையின் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். மாரடைப்புக்கான ஆபத்து காரணிகளில் ஒன்றாக இது இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். உடல் பருமன் உயர் இரத்த கொழுப்பு, உயர் ட்ரைகிளிசரைடு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன என்று Myohealth கூறுகிறது. 

2. புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தம்

புகைபிடிப்பவர்கள் மற்றும் அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், புகைபிடித்தல் காரணமாக தமனிகளில் காலப்போக்கில் பிளேக் உருவாகிறது. இது தமனிகள் சுருங்குவதற்கு வழிவகுக்கிறது மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதேபோல், அதிக மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரிக்கிறது. இது இதய நோய்களுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்

3. உடல் உழைப்பின்மை

உடல் உழைப்பின்மை இதய நோய்களின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் உடல்  உழைப்பு அல்லது உடல அசைவு ஏதும் இல்லாமல், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது., ஒன்றும் செய்யாமல் இருப்பதன் காரணமாக  ​​கொழுப்புப் பொருட்கள் தமனிகளில் உருவாகத் தொடங்கும். உங்கள் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் சேதமடைந்தாலோ அல்லது அடைக்கப்பட்டாலோ, அது மாரடைப்புக்கு வழிவகுக்கும். இதனால்தான் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். யோகா மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்

- மார்பு வலி அதிகரிப்பு

- அதிக வியர்வை

- மூச்சு திணறல்

- வாந்தி, குமட்டல்

-மயக்கம்

- திடீர் சோர்வு

- சில நிமிடங்களுக்கு மார்பின் மைய பகுதியில் கடுமையான வலி, கனம் அல்லது சுருக்கம்

- இதயத்திலிருந்து தோள்பட்டை, கழுத்து, கை மற்றும் தாடை வரை வலி

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News