Heart Attack Factors: 3 கெட்ட பழக்கங்களை தவிர்க்காவிட்டால் மாரடைப்பு வரலாம்

மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும், 3 முக்கிய கெட்ட பழக்கங்களை உடேன தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2022, 06:22 PM IST
  • மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள்
  • 3 கெட்ட பழக்கங்களை உடனே தடுக்க வேண்டும்
  • இல்லையென்றால் மாரடைப்பு ஆபத்து
Heart Attack Factors: 3 கெட்ட பழக்கங்களை தவிர்க்காவிட்டால் மாரடைப்பு வரலாம்  title=

Heart Attack: இன்றைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், வேகமாக அதிகரித்து வரும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று மாரடைப்பு. இதய நோய்கள் பொதுவாக வயதான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இளைஞர்களும் இந்த தீவிர நோயால் பாதிக்கப்படுகின்றனர். பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் மாரட்டைப்பால் கடந்த சில ஆண்டுகளில் இறந்ததை கேள்விப்பட்டிருக்கிறோம். 

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த வகையான அடைப்பு பொதுவாக இதய பகுதியில் கொலஸ்ட்ரால்  அதிகம் சேரும்போது ஏற்படுகிறது. இதுபோன்ற சில செயல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தினமும் செய்து வருகிறோம். அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது குறித்து அனைவரும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். நமது பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். 

மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!

மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

1. அதிகரிக்கும் உடல் பருமன்

பெரும்பாலான மக்கள் உடல் பருமன் அல்லது அதிக எடையின் பிரச்சனை மாரடைப்புக்கான ஆபத்து காரணிகளில் ஒன்றாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். உடல் பருமன் உயர் இரத்த கொழுப்பு, உயர் ட்ரைகிளிசரைடு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன என்று Myohealth கூறுகிறது. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும், சரியான நேரத்தில் உங்கள் எடையைக் குறைக்கவும் முயற்சி எடுப்பது நல்லது. 

2. புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தம்

புகைபிடிப்பவர்கள் மற்றும் அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், புகைபிடித்தல் தமனிகளில் காலப்போக்கில் பிளேக் கட்டமைக்க காரணமாகிறது. இதனால் தமனிகள் சுருங்குகிறது மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதேபோல், அதிக மன அழுத்தமும் இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரிக்கிறது.
இது இதய நோய்களின் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

3. உடல் செயலற்ற தன்மை

உடல் உழைப்பின்மை இதய நோய்களின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. ஏனெனில் உடல் செயலற்ற நிலையில் இருக்கும்போது, ​​கொழுப்புப் பொருட்கள் தமனிகளில் உருவாகத் தொடங்கும். உங்கள் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் சேதமடைந்தாலோ அல்லது அடைக்கப்பட்டாலோ, அது மாரடைப்புக்கு வழிவகுக்கும். இதனால்தான் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். யோகா மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்

- மார்பு வலி அதிகரிப்பு
- வியர்க்க
- மூச்சுத் திணறல்
- வாந்தி, குமட்டல்
-மயக்கம்
- திடீர் சோர்வு
- சில நிமிடங்களுக்கு மார்பின் மையத்தில் கடுமையான வலி, கனம் அல்லது சுருக்கம்
- இதயத்திலிருந்து தோள்பட்டை, கழுத்து, கை மற்றும் தாடை வரை வலி

ஆகியவை மாரடைப்புக்கான தீவிர அறிகுறிகளாகும். 

மேலும் படிக்க | சுயஇன்பத்தின் போது இந்த தவறை மட்டும் செய்யாதிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News