கண்ணின் கருவளையத்தைப் போக்கி அழகை மேம்படுத்தும் ஆரோக்கிய குறிப்புகள்

Eye Health And Dark Circles: கரு வளையங்கள் மற்றும் கண்கள் வீங்குவதற்கு காரணம் தூக்கமின்மை மட்டுமே அல்ல. சரியான காரணத்தை தெரிந்துக் கொண்டு நிவர்த்தி செய்வதும், தேவைப்படால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் நல்லது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 3, 2023, 11:52 PM IST
  • கருவளையமில்லா கண்ணழகைப் பெற டிப்ஸ்
  • கண்ணுக்கு கீழே வீக்கம் இருக்கிறதா?
  • ரத்தம் சுத்தமாக இருக்கிறதா?
கண்ணின் கருவளையத்தைப் போக்கி அழகை மேம்படுத்தும் ஆரோக்கிய குறிப்புகள் title=

ஆரோக்கியமான உடல் மற்றும் வாழ்க்கை முறையை பராமரிப்பது போலவே சருமத்தை பராமரிப்பதும் முக்கியம். முகப்பரு மற்றும் பருக்களை நாம் கவனித்துக் கொள்வதைப் போலவே, நம் கண்களுக்கும் கவனிப்பு தேவை. கண்களை சுற்றி வரும் கருவளையங்கள் மற்றும் கண்களுக்கு கீழே வீங்குவது ஆகியவை சுலபமாக சரி செய்யக்கூடியவை தான். 

நீண்ட டிஜிட்டல் திரை நேரம், பரபரப்பான மற்றும் வேகமான வாழ்க்கைமுறை ஆகியவற்றால், நம் மீதான சுய கவனிப்பு பின்தங்கிவிடுகிறது. கரு வளையங்கள் மற்றும் கண்கள் வீங்குவதற்கு காரணம் தூக்கமின்மை மட்டுமே அல்ல.

சரியான காரணத்தை தெரிந்துக் கொண்டு நிவர்த்தி செய்வதும், தேவைப்படால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் நல்லது.

கண்களின் கருவளையம் ஏற்பட காரணங்கள்
தூக்கமின்மை: இரவில் உங்களுக்கு திறமையான தூக்கம் இல்லையென்றால், உங்கள் இரத்த நாளங்கள் விரிவடையும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மேலும் உங்கள் கண்களுக்கு அருகிலுள்ள தோல் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருப்பதால், கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!

ஹைப்பர் பிக்மென்டேஷன்: உங்கள் உடல் இயற்கையாகவே அதிக மெலனின் உற்பத்தி செய்யும் போது கரு வளையம் ஏற்படும். மெலனின் உங்கள் உடலை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது என்றாலும், அது கண்களைச் சுற்றி கருவளையங்களையும் ஏற்படுத்தும்.

கொழுப்பு திசு: சிலருக்கு இயற்கையாகவே மெல்லிய தோல் அல்லது கண்களுக்குக் கீழே கொழுப்பு திசுக்கள் குறைவாக இருக்கும். தோல் மெல்லியதாக இருப்பதால், கண்ணுக்கு கீழே உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கருவளையத்தை உருவாக்குகின்றன.

இரும்புச் சத்து குறைபாடு: இரும்புச் சத்து குறைவினால் இரத்த சோகை ஏற்படலாம். இரத்த சோகை என்பது உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத நிலை ஆகும்.  

கருவளையத்திற்கான சிகிச்சை

பெண்கள் ஆண்கள் என பாலின பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். கருவளையங்கள் ஏற்பட்டால், முகம் பொலிவிழந்து, முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

மேலும் படிக்க | கரு முதல் கடைசி வரை ஹார்மோன்களை காப்பாற்றும் துத்தநாக சத்து! பெண்களுக்கு அவசியம்

பப்பாளி 
பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை உண்டு. வைட்டமின் ஏ கண்களை ஆரோக்கியமாகவும், அதை சுற்றியுள்ள மென்மையான சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அவசியம் தேவை. வைட்டமின் சி சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இந்த இரண்டு சத்துக்களையும் கொண்ட பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்ணுக்க்கு கீழுள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி 

சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

வைட்டமின் ஈ மற்றும் சி

தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் போய்விடும்.

மேலும் படிக்க | ஜாக்கிரதை! Vitamin C குறைபாடு இருந்தால் உடலில் இந்த பிரச்னைகள் வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News