இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’ நிறைந்த சில உணவுகள்!

பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான கனிமமாகும், இது நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2022, 05:45 PM IST
  • இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் இன்றியமையாதது.
  • பொட்டாசியம் சத்து நிறைந்த உணவு பொருட்கள்.
  • உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு மருத்துவத்தில் ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது.
இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’ நிறைந்த சில உணவுகள்! title=

பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான கனிமமாகும், இது நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது. ஆனால் பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அது மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஒரு நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு லிட்டருக்கு 3.6 மில்லிமோல்களுக்குக் கீழே குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது.

இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா அல்லது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் (ventricular fibrillation) போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே உணவில் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம். 

பொட்டாசியம் சத்து நிறைந்த உணவு பொருட்கள்

கீரை

கீரை ஒரு சத்தான காய்கறி. வேகவைத்த கீரையின், ஒரு கோப்பைக்கு 839 மி.கி பொட்டாசியம் உள்ளதால் எடை இழக்க விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க!

ராஜ்மா

ராஜ்மாமாவில் புரதம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இவை அனைத்தும் எடை இழப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள். 

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆண்டு முழுவதும் கிடைக்கும். சுவையான வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும்.

இளநீர்

இளநீரில் மக்னீசியம், கால்சியம், உப்பு, மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து அதிகம் என்றாலும், அதில் புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News