நாட்டில் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்யும் மசோதாவை மக்களவை புதன்கிழமை நிறைவேற்றியது.
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் தடை மசோதா (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) 2019, செப்டம்பர் 18 அன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை மாற்ற முயல்கிறது. எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை மசோதா, 2019 மின்னணு சிகரெட்டுகளை (மின்-சிகரெட்டுகள்) மின்னணு சாதனங்களாக வரையறுக்கிறது.
மின்-சிகரெட்டுகள் ஆனது, நிகோடோன் மற்றும் பிற இரசாயனங்களை கொண்டு ஒரு உள்ளிழுக்கும் போதை நிராவினையினை உருவாக்கும் ஒரு பொருளாகும். இந்த சூடாக்கும் பொருள் ஆனது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.
இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் தடை மசோதா விதிமுறையை மீறும் எந்தவொரு நபருக்கும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் மீண்டும் மீண்டும் அதே தவறினை தொடர்ந்து செய்தால் அவருக்கு சிறை தண்டனை 3-லிருந்து 5 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குறித்த மசோதாவின் கீழ், எந்தவொரு நபரும் மின்-சிகரெட்டுகளை சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை. இந்த மசோதாவின் கீழ், இந்த ஒரு நபரும் இ-சிகரெட்டுகளை சேமித்து வைத்திருந்தால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மசோதாவின் கீழ், எந்தவொரு விதிமுறையும் மீறப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி நம்பினால், இ-சிகரெட்டுகளின் வர்த்தகம், உற்பத்தி, சேமிப்பு அல்லது விளம்பரம் மேற்கொள்ளப்படும் எந்த இடத்தையும் அவர் தேடலாம்.