மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை..!!

உலக அளவில் அதிக மன அழுத்தத்தில் இந்திய இளைஞர்கள் இருப்பதாக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது!!

Last Updated : Jun 27, 2019, 03:34 PM IST
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை..!! title=

உலக அளவில் அதிக மன அழுத்தத்தில் இந்திய இளைஞர்கள் இருப்பதாக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது!!

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது புகழ்பெற்ற பழமொழி. அந்தப் பழமொழியை நம்மில் பலரும் மறந்துவிட்டோம். நோயற்ற வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, செல்வத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆரோக்கியத்துக்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சிகள் செய்வதில்லை. விளைவு உடல், மன ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கிறோம். ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்கள் நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றனர். 

இந்நிலையில், உலக அளவில் அதிக மன அழுத்தத்தில் இந்திய இளைஞர்கள் இருப்பதாக சுகாதார நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக முழுவதும் 30 கோடிக்கும் மேல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்த நோயானது மனிதர்களை பாதிக்கும் மிகக் கொடுமையான நோயாக இருப்பதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி சர்வதேச அளவில் இந்திய மக்கள் தொகையில் 6.5 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 1 லட்சம் நபர்களுக்கு 10.9 நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு அடுத்த படியாக சீனா, அமெரிக்க, பிரேசில், இந்தோனேசியா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 10-19 வயதுடையவர்களில் 6 பேரில் ஒருவர் மன  அழுத்தத்தில் உள்ளார்கள் என்றும், அலக அளவில் 16 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News