மன அழுத்தமும் சோர்வும் நமது உடலை பாதிக்கும் தன்மை கொண்டவை. வேலை செய்யும் நேரத்தில் சோர்வு ஏற்பட்டால் உங்களது வேலையை மிக அதிகமாக பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வானது விட்டமின் குறைபாடுகள் காரணமாகவும் கூட ஏற்படலாம்.
உணவு வகைகளிலேயே மன அழுத்தத்தைக் குறைப்பவையும் இருக்கின்றன. அவைகளை பற்றி குறிப்புகள் சில
வாழைப்பழம் மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது. மன அழுத்தத்துக்கு நல்லது.
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த்தூளைப் பாலில் சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது.
மண்பானைத் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.
ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை யாகும்.
உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்தால் நிம்மதியான தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும்.
ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் வேலை செய்ததால் உயிர் இழந்துள்ளார். மாதம் ஒன்றிர்க்கு சுமார் 159 மணிநேரம் வேலை செய்ததே இவரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
2013- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானை சேர்ந்த மிவா சாடோ என்னும் அரசியல் பத்திரிகையாளர் இதய செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் கொடுத்துள்ள அறிக்கையினபடி மிவா அளவுக்கு அதிகமான பணிச்சுமை காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆதலால் மனக்கவலைகளை உருவாக்கும் சிந்தனைகள் உதிக்க ஒருபோதும் இடம் கொடுத்துவிடக்கூடாது. பிரச்சினைகள் துளிர்விட தொடங்கும்போதே மன அழுத்தம் தோன்றுவதற்கு இடம் கொடுக்காதபடி மனதை திசை திருப்பி விட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.