உடல் முழுக்க வியர்க்குருவா... ஊசி குத்துவது போல் வலிக்கிறதா... அதை சரிசெய்வது எப்படி?

Prickly Heat: கோடை காலத்தில் உங்களுக்கு உடல் முழுவதும் வியர்க்குரு இருக்கிறது என்றால் அதனை எப்படி விரைவாக போக்குவது என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 9, 2024, 01:36 PM IST
  • வியர்க்குரு ஏற்படுவதன் காரணத்தை அறிந்துகொள்வதன் மூலம் அதனை முன்னரே தடுக்கலாம்.
  • குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இது அதிகமாக காணப்படும்.
  • வழக்கத்தை விட அதிக வியர்வை வரும் நபர்களுக்கு வியர்க்குரு ஏற்படும்.
உடல் முழுக்க வியர்க்குருவா... ஊசி குத்துவது போல் வலிக்கிறதா... அதை சரிசெய்வது எப்படி? title=

Prickly Heat Home Remedies: கோடை காலம் என்று வந்துவிட்டாலே வெயில் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதுதான் அனைவருக்கும் முதல் எண்ணமாக இருக்கும். தினமும் தண்ணீர், ஜூஸ் குடிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் வேளைகளில் வெளியில் அதிகம் சுற்றக்கூடாது, ஒரு நாளுக்கு இரண்டு வேளை குளிக்க வேண்டும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என பல சிந்தனைகள் இருக்கும். 

ஆனால், வழக்கத்தை விட இந்தாண்டு கோடையில் வெயில் அதிகமாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கத்திரி வெயில் உச்சத்தில் இருக்கும் மே மாதமே தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் பலரால் கடந்த ஏப்ரல் மாதத்தின் வெயிலேயே தாங்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக பதிவாகும் வெயிலை விட இந்த மே மாதத்தில் அதிக வெயில் பதிவாகியிருக்கிறது. 

வியர்க்குரு வர காரணம் என்ன?

உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவும், சமருத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், உடலில் வியர்வை தவிர்க்க அதற்கேற்ற உடைகளை உடுத்துவதும் என பல முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இளைய வயதினரின் சூழலே இந்த கோடையில் மிகவும் மோசம் என்றால் குழந்தைகளின் முதியோர்களின் நிலைமை என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமையாகும். இந்த வெயிலால் பலரும் கடும் பிரச்னையை சந்தித்து வரும் நிலையில், அதில் முக்கிய உடல்நல பாதிப்பு என்றால் உடலில் வியர்க்குரு வருவது எனலாம். 

வெயில் காலத்தில் வியர்க்குரு அதிகமாக ஏற்படும். இந்த வியர்க்குரு ஏன் வருகிறது, அதனை எப்படி சரியாக்குவது என்பதை இதில் காணலாம். அதாவது, வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வருபவர்களுக்கும், வியர்வை சுரப்பிகளில் அதிக தடுப்புகள் இருப்பவர்களுக்கும் இந்த வியர்க்குரு ஏற்படும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம்தான் இந்த வியர்க்குரு அதிகமாக காணப்படும், அதுவும் வெயில் மற்றும் வெக்கையான காலத்தில்தான்... ஏனென்றால் அவர்களின் வியர்வை சுரப்பிகள் போதுமான அளவிற்கு முழுமையடைந்திருக்காது. எனவே, சிவந்த மற்றும் சற்று வீக்கம் அடைந்த நிலையில் வியர்க்குரு ஏற்படும். இதனால் அதிக சொறி எடுக்கும். 

மேலும் படிக்க | வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்

கடும் வேதனையை அனுபவிப்பார்கள்

குறிப்பாக வியர்க்குரு உடைகள் உடலில் இருக்கமாக இருக்கும் பகுதிகளிலேயே அதிகம் ஏற்படும். முதுகு, வயிறு, கழுத்து, நெஞ்சின் மேற்புறம், இடுப்பு, அக்குள் ஆகிய இடங்களில்தான் அதிகம் வியர்க்குரு ஏற்படும். அதிகப்படியான வியர்வை வருவதால் இறந்த சரும செல்கள் மற்றும் அதன் கிருமிகள் வியர்வை சுரப்பியில் தடுப்பை ஏற்படுத்தும். இதனால், தோலில் வியர்வை தேங்கிவிடுகிறது. அதாவது தோலின் கீழ் வியர்வை தேங்குவதால் புடைப்புகள் ஏற்பபடும். இந்த புடைப்புகளே வியர்க்குரு ஆகும். இந்த வியர்க்குரு கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் யாரோ தங்களை ஊசியால் குத்துவது போல் உணர்வார்கள். மேலும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். 

மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்

இந்த வியர்க்குரு பெரிய பிரச்னை இல்லையென்றாலும் இந்த இரண்டு நிலைகள் வந்தால் நிச்சயம் தவறாமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். வியர்க்குரு சில நாள்களில் தானாகவே போகவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும். மேலும் உங்களுக்குடன் தொடர்பில் இருந்தவரோ அல்லது உடன் இருப்பவர்களுக்கோ உங்களுக்கு வந்த அதே பகுதியில் வியர்க்குரு வந்தது என்றால் இருவரும் மருத்துவ ஆலோசனையை உடனே பெற வேண்டும்.

பொதுவாக வியர்க்குரு சில நாள்களில் தானாகவே சரியாகி வியர்க்குரு வந்த பகுதிகளை குளிர்ச்சியாகவும், காய்ந்த நிலையிலும் வைத்திருங்கள். மேலும், எண்ணெய் சார்ந்த பொருள்களை பயன்படுத்தாதீர்கள். அது உங்களின் வியர்வை சுரப்பில் தடையை ஏற்படுத்தலாம். மருத்துவரை சந்தித்து உங்களின் தோலுக்கு ஏற்ற லோஷன்களை பெற்றுக்கொள்ளவும், அதன்மூலம் சொறி, எரிச்சலை தடுக்கலாம்.  

பொறுப்பு துறப்பு: வியர்க்குரு குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. எனவே, இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் படிக்க |  அதிக கலோரிகளை எரிக்கும் சில பயிற்சிகள்... இஞ்சி இடுப்பழகுக்கு நாங்க கியாரண்டி!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News