60 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 2,000 பித்தப்பை கற்கள்....

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி!!

Updated: Aug 24, 2019, 03:50 PM IST
60 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 2,000 பித்தப்பை கற்கள்....

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி!!

தாய்லாந்து நாட்டில் நாங் காய் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். முதலில் இதனை சாதரண வலி என நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்கள். இந்நிலையில் சில நாட்களில் வலி அதிகமாகி அந்த பெண்ணிற்கு மலச்சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறி போன அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

அந்த பெண்ணின் வயிற்றின் உள்ளே சுமார் 1898 சிறு கற்கள் இருந்தது. உடனே இந்த தகவலை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். சுமார் 40 நிமிடங்கள் வெற்றிகராக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் இருந்த கற்களை முழுவவதுமாக அகற்றியுள்ளனர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனிடையே மருத்துவர் ஒருவர் கூறுகையில் '' பெண்ணின் வயிற்றின் உள்ளே எப்படி இவ்வளவு கற்கள் வந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்த பெண் கூறினால் மட்டுமே உண்மை அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த பெண் ஓய்வில் இருக்கிறார். எனவே இப்பொது அதனை கேட்பது முறையல்ல'' என அவர் கூறினார்.