காய்கறிகளின் side effects கேட்டு அப்டியே ஷாக் ஆயிடுவீங்க: அதிர்ச்சி அளிக்கும் தகவல்

எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அது காய்கறிகளாக இருந்தாலும் சரி, எண்ணெயில் பொரித்தவையாக இருந்தாலும் சரி, பழங்களாக இருந்தாலும் சரி....அளவுக்கு மீறினால் ஆபத்தே!! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2021, 04:53 PM IST
காய்கறிகளின் side effects கேட்டு அப்டியே ஷாக் ஆயிடுவீங்க: அதிர்ச்சி அளிக்கும் தகவல் title=

எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அது காய்கறிகளாக இருந்தாலும் சரி, எண்ணெயில் பொரித்தவையாக இருந்தாலும் சரி, பழங்களாக இருந்தாலும் சரி....அளவுக்கு மீறினால் ஆபத்தே!! இதை நாம் அனைவரும் அறிவோம். புரதங்கள், வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த சத்தான காய்கறிகளை பல வழிகளில் நாம் தயாரித்து உண்கிறோம். இது நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, ஆனால் சில காய்கறிகள் உடலுக்கு வலு சேர்ப்பதைத் தவிர, ஆச்சரியமான பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட ஐந்து காய்கறிகளைப் பற்றி இங்கே காணலாம்.

காளான்களால் தோல் பிரச்சனை ஏற்படலாம்

காளான்களில் வைட்டமின் டி அதிகப்படியாக காணப்படுகிறது. ஆனால் சிலருக்கு காளான்களை சாப்பிட்ட பிறகு தோலில் தடிப்புகள் வரும். உணவில் காளான்களைச் சேர்ப்பது சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆனால், காளான்களை பச்சையாக சாப்பிடும்போதுதான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

கேரட் தோல் நிறத்தை மாற்றும்

எல்லோருக்கும் கேரட் பிடித்தமான காயாகும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் நம் சருமம் (Skin) ஆரஞ்சு நிறமாக மாறும். கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால், அதிக கேரட் சாப்பிடுவதன் மூலம், தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். கேரட் மட்டுமல்ல, அதிகமாக பூசணி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்க்கு ஆகியவற்றை சாப்பிடுவதாலும் சருமத்தின் நிறம் மாறும்.

ALSO READ: தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா? அதிர வைக்கும் health news!!

பீட்ரூட் சிறுநீரின் நிறத்தை மாற்றும் 

அதிகமாக பீட்ரூட் (Beetroot) சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் மாறும். இளஞ்சிவப்பு நிறத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் பீதியடைய ஒன்றுமில்லை, இது பீட்ரூட்டின் ஒரு பக்க விளைவாகும்.

ஆரஞ்சு சாறின் பக்க விளைவுகள்

பீட்டா கரோட்டின் போலவே, வைட்டமின் சி (Vitamin C) அதிகமாக உட்கொள்வதும் நமது சிறுநீரின் நிறத்தை மாற்றும். ஒரே நாளில் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், 
சிறுநீரின் தோற்றம் மாறுபடுகிறது. நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போதும் சிறுநீரின் நிறம் மாறுகிறது. எனவே நாம் அதிக வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும்போது, ​​அதனுடன் ஏராளமான தண்ணீரை குடிக்க வேண்டும்.

முட்டைக்கோஸ் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது

காலிஃபிளவர் மற்றும் இந்த வகையின் பிற காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதால், இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முட்டைக்கோசு ஆரோக்கியமான காய் என்றாலும், அதிகமாக உட்கொள்ளும்போது, அது ஜீரணிக்க கடினமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக பச்சையாக சாப்பிட்டால் அது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதில் ரஃபினோஸ் உள்ளது, இதை நம் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாது. இதனால் நமக்கு வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ALSO READ: முதுகு வலி பிரச்சனையா? இந்த tips உங்களுக்கு நிச்சயமாக உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News