அதீதமான சோர்வு - பலவீனம் இருக்கா... இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கலாம்

சில சமயங்களில் நன்றாக சாப்பிட்டு நன்றாக தூங்கினாலும் பலவீனமும் சோர்வும் நீங்காமல் இருக்கலாம். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியம் செய்வது நல்லதல்ல. இது கடும் உடல் நல பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 23, 2024, 09:24 AM IST
  • மூளை சிறப்பாக செயல்பட வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது.
  • வைட்டமின் பி9 என்னும் ஃபோலேட் குறைபாடு.
  • சோர்வு மற்றும் பலவீனத்திற்குகு சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடு காரணமாக இருக்கலாம்.
அதீதமான சோர்வு - பலவீனம் இருக்கா... இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கலாம் title=

இன்றைய பிஸியான வாழ்க்கையில், ரிலாக்ஸ் செய்ய நேரமில்லாமல், கடுமையாக வேலை செய்வது சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழி வகுக்கும் என்றாலும், சில சமயங்களில் நன்றாக சாப்பிட்டு நன்றாக தூங்கினாலும் பலவீனமும் சோர்வும் நீங்காமல் இருக்கலாம். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியம் செய்வது நல்லதல்ல. இது கடும் உடல் நல பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

சோர்வு மற்றும் பலவீனத்திற்கு, வேலை அழுத்தம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், அதீத சோர்வு மற்றும் பலவீனத்திற்கு சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடும் காரணமாக இருக்கலாம் என ஊட்டசத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் சோர்வடையச் செய்வதற்குக் காரணமாக இருக்கும் அத்தகைய சில வைட்டமின்கள் மற்றும் பிற சத்து குறைபாடுகளைப் பற்றி நிபுணர்கள் கூறுவதை அறிந்து கொள்ளலாம்

வைட்டமின் பி12 குறைபாடு

வைட்டமின் பி12 ஆரோக்கியமான உடலுக்கு மட்டுமல்லாது, மூளை சிறப்பக செயல்படவும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நரம்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அணுக்களை அதிகரிக்க முக்கியமாக தேவைப்படுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், சோர்வு, பலவீனம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே, இந்த குறைபாடு ஏற்படாமல் இருக்க வைட்டமின் பி12 நிறைந்த பால் பொருட்கள், முட்டை, இறைச்சி மற்றும் பீன்ஸ் வகை பருப்புகள் போன்ற உணவுகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வைட்டமின் பி9  என்னும் ஃபோலேட் குறைபாடு

வைட்டமின் பி9 என்றும் அழைக்கப்படும் ஃபோலேட் ஊட்டச்சத்து, உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகிறது. அதன் குறைபாடு உடல் சோர்வு, மனச்சோர்வு மற்றும் எதிலும் கவனம் செலுத்த இல்லாமை ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க ஃபோலேட் சத்துக்கள் நிறைந்த, பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், ஆற்றல் அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு தசைகளை பலவீனப்படுத்துவதோடு, உடல் வலி, மூட்டு வலி சோர்வை ஏற்படுத்தும். இயற்கையான சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி ஊட்டச்சத்தினை செலவில்லாமல் பெறலாம்.இது தவிர உணவுகளில், ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த மீன், முட்டை போன்றவற்றில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.

மேலும் படிக்க | உடல் பருமனை உடனே குறைக்க உதவும் காலை பழக்கங்கள்: 10 நாட்களில் ஒல்லியாகலாம்

இரும்பு சத்து குறைபாடு

வைட்டமின்களை தவிர, ரத்த சோகை காரணமாகவும் உடலில் அதீத சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இரத்தத்தில் ஹீமோகுளோபினை உருவாக்க இரும்புச்சத்து உதவுகிறத. மேலும், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக இல்லாமல் உடலும், மனமும் சோர்வடையும். அதன் அறிகுறிகளில் சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க, பச்சை இலை காய்கறிகள், இறைச்சி மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.

மெக்னீசியம் குறைபாடு

மெக்னீசியம் குறைபாடானது தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும்.  தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மெக்னீசியம் அவசியம். இதன் அத்தகைய சூழ்நிலையில், அதன் குறைபாட்டு ஏற்படாமல் தடுக்க, நீங்கள் பருப்புகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
 
நீர்சத்துக் குறைபாடு

உடலின் ஆற்றலுக்கு சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேலும் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். போதுமான அளவு தண்ணீர் குடித்தல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் உடலில் நீர் பற்றாக்குறையும் சோர்வை ஏற்படுத்தும். மேலும், சில உடல் நல பிரச்சனைகள்ம் உடல் சோர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்பதால், நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News