கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதில் தொடங்கி புற்றுநோய் செல்களை அழித்தல், இதய நோய்களை தடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனையையும் அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்துவதிலும் அதிகப்படியான ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவும் கேரட்டில் குறைந்த அளவு கலோரியும் சர்க்கரை அளவும் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் தினமும் கேரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கேரட்டை விட, கருப்பு நிற கேரட்டில் கரோட்டினாய்டு உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், கருப்பு நிற கேரட்டை தவறவிடாதீர்கள். வைட்டமின் ஏ-க்கு முன் கர்சரான பீட்டா கரோட்டின் கருப்பு கேரட்டில் உள்ளது, கண்பார்வையை பராமரிக்க உதவும் பண்புகள் பிற நிற கேரட்டுகளை விட அதிகமாக உள்ளது.
கருப்பு கேரட்டின் நன்மைகள்
கேரட்களில் ஒரு அரிய வகை கருப்பு கேரட் ஆகும். கருப்பு நிறத்தில் உள்ள கேரட்டில், பிற வகை கேரட்டுகளைவிட அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கேரட் ஆரஞ்சு மற்றும் சிவப்பு மட்டுமல்ல, வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு என வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. கருப்பு கேரட் என்பது இந்தியாவிலும் சீனாவிலும் காணப்படும் அரிதான கேரட் வகையாகும். எனவே, கருப்பு கேரட் கிடைத்தால் அதை ஒருபோதும் தவறவிட வேண்டாம்.
மேலும் படிக்க | உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் மேஜிக்கல் பானங்கள்! சிம்பிள் வெயிட் லாஸ் டிப்ஸ்
கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், வயதான தோற்றம் ஏற்படுவது தள்ளிப் போடும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும். அதிக பசியும் எடுக்காது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், பசியும் அடங்கும். இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் இருந்தால் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
மேலும் படிக்க | அக்ரூட் உலர் பழத்தை எப்போது எப்படி சாப்பிட்டால் யூரிக் அமில பிரச்சனை தீரும்?
கேரட்டில் உள்ள பால்காரினால், பால்காரின்டியோல் போன்ற பண்புகள், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. கேரட் சாப்பிடுவதனால் வாயில் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முட்டைகோஸ்! அருமைபெருமை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ