புதுடெல்லி: உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் நெய்யின் நன்மைகள் பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
நெய்யின் நன்மைகள்:-
* செரிமான மண்டலம்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
* நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு தினமும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து.
* லாக்டோஸ் சகிப்புத்தன்மை
நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
* வைட்டமின்கள் அதிகம்
நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.