என்ன பண்ணாலும் தொப்பை குறையலயா? இத குடிச்சி பாருங்க, உடனே குறையும்

Tamarind Juice For Weight Loss: புளிப்பு சுவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புளிப்பான ஒரு பொருள் கொண்டு வயிறு மற்றும் இடுப்பின் கொழுப்பை குறைப்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2023, 07:21 PM IST
  • புளி சாறு நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.
  • லேசான டையூரிடிக் பண்புகள் இதில் உள்ளன.
  • இது உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
என்ன பண்ணாலும் தொப்பை குறையலயா? இத குடிச்சி பாருங்க, உடனே குறையும் title=

எடை இழப்புக்கான வீட்டு வைத்தியம்: உடல் பருமன் இன்று ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த பிரச்சனையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர். சொல்லப்போனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், நீண்ட நேரத்துக்கு உடலை எந்த வித நடவடிக்கையும் இல்லாமல்  வைத்திருப்பதும்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம். ஆனால் உடல் பருமன் என்பது ஒரு நோய் மட்டுமல்ல, இதன் காரணமாக இன்னும் பல ஆபத்தான நோய்களும் உங்களை வந்தடையலாம். ஆகையால் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். 

உடல் எடையை குறைக்க இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். ஏனெனில் சர்க்கரை கொழுப்பாக மாறி உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், புளிப்பு சுவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புளிப்பான ஒரு பொருள் கொண்டு வயிறு மற்றும் இடுப்பின் கொழுப்பை குறைப்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

புளி சாறு குடித்தால் உடல் எடை குறையும்

புளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், புளி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுகிறார். அதன் விளைவு சில நாட்களில் தெரியும்.

மேலும் படிக்க | சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் சுகர் அதிகமாகுமா... உண்மை என்ன? 

புளி சாறு சுவையானது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. லேசான டையூரிடிக் பண்புகள் இதில் உள்ளன. இது உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதன் மூலம் நாம் உட்கொள்ளும் தேவையற்ற ஜங்க் ஃபுட்டின் அளவு குறையும் என்பதால் எடை குறையத் தொடங்குகிறது.

செரிமானத்திற்கும் சிறந்தது

புளி சாறு செரிமானத்திற்கும் சிறந்தது. செரிமான அமைப்பு சரியாக இருந்தால், உடல் எடையை குறைக்க மிகவும் எளிதாக இருக்கும். இதனுடன், இந்த பானத்தின் உதவியால்  கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கலாம். இது உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க வைக்கும்.

புளி சாறு செய்வது எப்படி? 

இதற்கு, முதலில் புளியை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி, பின் அதன் விதைகளை வெளியே எடுக்கவும். இப்போது 2 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் புளியை கலந்து மேலும் சிறிது நேரம் சூடாக்கவும். இப்போது அதை ஒரு கிளாஸில் வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி, அது குளிரும் வரை காத்திருக்கவும். பின் இதை குடிக்கவும். நீங்கள் தொடர்ந்து இந்த பானத்தை குடித்து வந்தால், உடல் எடை மெதுவாக குறையத் தொடங்கும். எனினும், சிலருக்கு புளி ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடல் சூட்டை கிளப்பும். அவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று இதை பயன்படுத்தவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | தலைவலி, சோர்வு உங்களை ஆட்டிப்படைக்கிறதா? காரணம் இதுதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News