சுகர் லெவலை சூப்பராக குறைக்கும் சிறுதானியங்கள்... மிஸ் பண்ணாதீங்க

Gluten-free Millets for Diabetes Control: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் சிறுதானியங்களின் மதிப்பு, பலருக்கு தெரிவதில்லை. அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக, சிறுதானிய உணவுகளை சேர்த்து வந்தாலே, நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 20, 2024, 10:27 AM IST
  • சிறுதானிய உணவுகளை சேர்த்து வந்தாலே, நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • சிறுநீரகம், கண், இதயம் போன்ற உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு.
  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்.
சுகர் லெவலை சூப்பராக குறைக்கும் சிறுதானியங்கள்... மிஸ் பண்ணாதீங்க title=

Gluten-free Millets for Diabetes Control: இன்றைய ஆரோக்கிய மற்றும் உணவு பழக்கம் காரணமாகவும், மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் நீரிழிவு என்னும் ரத்த சர்க்கரை நோய் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ரத்த சர்க்கரை அளவு நீண்ட நாட்களுக்கு கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம், கண், இதயம் போன்ற உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறுதானியங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.. அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக, சிறுதானிய உணவுகளை சேர்த்து வந்தாலே, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் சிறுதானியங்களின் மதிப்பு, பலருக்கு தெரிவதில்லை. இதில் குளூட்டன் இல்லை என்பதோடு, நார்ச்சத்தும் மிக அதிகம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் சிறுதானியங்களில், வைட்டமின்கள் கால்சியம், தாதுக்கள் ஆகியவற்றோடு, பீட்டா கரோட்டின், நியாசின், வைட்டமின் பி6, போலிக் அமிலம், மெக்னீசியம் பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. சிறுதானியங்களின் கிளைசிமிக் குறியீடும் மிகவும் குறைவு. எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது (Diabetes Control Tips) எளிதாகிறது

சில சிறு தானியங்களும் அவற்றின் நன்மைகளும்

ராகி என்னும் கேழ்வரகு

கேழ்வரகு சிறுதானியங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. குளூட்டன் அல்லாத மிகச்சிறந்த சிறு தானியமான இதில் இரும்புச் சத்தும் கால்சியமும் நிறைந்துள்ளது. அது ஒரு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களும் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் சுகர் லெவல் கட்டுக்குள் இருப்பதோடு, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் கொழுப்பை எரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தானியம்.

தினை

கேழ்வரகு போலவே தினையிலும் இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பவர்களுக்கு, நினை உட்பட அனைத்து சிறு தானியங்களும் மிகவும் சிறந்தது.

மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்

கம்பு

கம்பில் புரதச்சத்தோடு, மெக்னீசியம் இரும்புச்சத்து, கால்சியம் நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நீரழிவு நோயை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு மட்டும் இன்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த தீர்வாகும். மேலும் இதில் கலோரி அளவும் குறைவாகவே உள்ளன.

அமர்நாத்

தண்டுக்கீரை விதைகளில் இருந்து எடுக்கப்படும் தானியமான அமர்நாத் புரதச்சத்து, மெக்னீசியம் பொட்டாசியம், நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மற்ற சிறு தானியங்களின் விட அமராந்த் தானியத்தில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது குறிப்பிடுத்தக்கது. இதில் உள்ள தாது சத்துக்கள், மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுவதோடு, நரம்பியல் பிரச்சனை ஏதும் வராமல் பாதுகாக்கிறது.

சோளம்

சோளத்தில் வைட்டமின் பி, மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள பிளவர் நாயுடுகள், பினாலிக் அமிலங்கள் மற்றும் தானியங்கள் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பலவித நோய்களிலிருந்து நம்மை காக்கின்றன. மேலும் சோளத்தில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட சோளம், உடல் எடை குறைப்பவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவாகவும் அமைகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News