யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீரில் இந்த அறிகுறிகள் தோன்றும்... அலர்ட் ஆகிடுங்க!!

Uric Acid Symptoms in Urine: உடலில் யூரிக் அமிலம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமானால், அது மூட்டுகளைச் சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யப்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 9, 2024, 05:34 PM IST
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்.
  • சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம்.
  • சிறுநீரில் இரத்தம் வருதல்.
யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீரில் இந்த அறிகுறிகள் தோன்றும்... அலர்ட் ஆகிடுங்க!!  title=

Uric Acid Symptoms in Urine: இன்றைய அவசர காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பலர் பல வித உடல்நல கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள். இதில் யூரிக் அமில பிரச்சனையும் ஒன்றாகும். நாளுக்கு நாள் அதிகமான மக்கள் யூரிக் அமில அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கபடுகிறார்கள். யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான கழிவுப் பொருளாகும். இது பியூரின் எனப்படும் இரசாயனத்தின் முறிவால் உடலில் உற்பத்தி ஆகிறது. பொதுவாக நமது சிறுநீரகங்கள் அதை வடிகட்டி சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றும். ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​உடலில் அதன் அளவு அதிகரித்து, மூட்டுகளில் படிகங்கள் வடிவில் இவை குவிந்து விடுகின்றன. இவை மூட்டுகளின் இயற்கையான குருத்தெலும்புகளை அழிக்கிறது. இதனால், நடக்க முடியாமல், கீல்வாதம் மூட்டுகளில் வலி ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

உடலில் யூரிக் அமிலம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமானால், அது மூட்டுகளைச் சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யப்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​உடலில் பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். இது தவிர, அதன் சில அறிகுறிகளை சிறுநீரிலும் காண முடியும். இவற்றை பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் சிறுநீரில் தோன்றும் அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம். 

சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படும். இது தவிர சிறுநீர் கழிக்கும் போது வலியும் ஏற்படலாம். இருப்பினும், இது சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது வேறு ஏதேனும் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சரியான காரணத்தை அறிய வேண்டியது மிக அவசியமாகும். இதற்கு ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், யூரிக் அமில பிரச்சனை தீவிரமடையும் நிலை ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

யூரிக் அமில அளவு அதிகரித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது, ​​சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாது. இது சிறுநீரகங்களில் சுமையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற வலுவான தூண்டுதல் ஏற்படும். இப்படிப்படட் பிரச்சனையால் ஒருவர் நீண்ட நாள் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு மருத்துவரை காண்பது நல்லது. 
 
சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால், சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏபடுகின்றது. இதன் காரணமாக, சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். சிறுநீரில் நுரை அல்லது கருமை நிறம் தோன்றினால், கண்டிப்பாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

மேலும் படிக்க | பீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!

சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீரில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. இருப்பினும், இதற்குப் பின்னால் வேறு காரணங்களும் இருக்கலாம். நீரிழிவு போன்ற நோய்களிலும், சிறுநீரில் கடுமையான வாசம் வீசலாம். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு இதற்கான சிகிச்சையை ஏற்க வேண்டியது அவசியமாகும். 

சிறுநீரில் இரத்தம் வருதல்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​உடலில் வறட்சி ஏற்படும். நீரிழப்பு காரணமாக சிறுநீரில் இரத்தம் வர வாய்ப்புள்ளது. சிறுநீரில் இரத்தம் வருவது தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாற்கான அறிகுறியாகும். இந்த வகையான பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வெண்டியது மிக அவசியமாகும். 
 
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் முழுக்க வியர்க்குருவா... ஊசி குத்துவது போல் வலிக்கிறதா... அதை சரிசெய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News