பீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!

Side Effects Of Beer: பீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்: கோடை காலத்தில் குளிர்ந்த பீர் குடிப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும். பீர் அருந்தினால் சோர்வு முற்றிலும் மறைந்துவிடும் என்ற நம்பிக்கை. மற்ற ஆல்கஹால் பானங்களை விட இது குறைவான பாதிப்பை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் பீர் குடித்தால் ஆயுட்காலம் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பீர் குடிப்பதால் வலி ​​குறைகிறது மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்து குறைகிறது என கூறப்படுகிறது. இருப்பினும், தினமும் பீர் குடிப்பதால் பல ஆரோக்கிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் உடலில் பல வகையான நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது.

 

1 /8

Side Effects Of Beer: தினமும் பீர் குடிக்கும் பழக்கம் இருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் பல விதமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். தினமும் பீர் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

2 /8

தினமும் பீர் உட்கொண்டால், உங்கள் எடை மிக வேகமாக அதிகரிக்கும். பீர் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. அதோடு அதிக கார்போஹைட்ரே உள்ளது. தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் பீர் குடிப்பதால் தொப்பை மற்றும் உடல் பருமன ஏற்படும் என்பது தெரிய வந்துள்ளது. 

3 /8

பீர் பானம், அளவிற்கு அதிகமாகும் போது கல்லீரலை சேதப்படுத்தும். தினமும் பீர் குடிப்பது கொழுப்பு கல்லீரல், ஆல்கஹால் ஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜியில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், தினமும் பீர் அருந்துவதால் கல்லீரல் அழற்சி, புண்கள் மற்றும் இறுதியில் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும்.

4 /8

அளவாக பீர் அருந்துவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் அதே வேளையில், தினமும் அதிக அளவு பீர் குடிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், தினமும் பீர் குடிப்பது உட்பட அதிக மது அருந்துதல், உயர் இரத்த அழுத்தம், கார்டியோமயோபதி மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளது.

5 /8

தினமும் பீர் குடிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான மது அருந்துதல் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் டிசார்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிகப்படியான பீர் நுகர்வு மனச்சோர்வை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

6 /8

தினமும் பீர் குடிப்பது உண்மையில் உங்கள் தூங்கும் பழக்கத்தை சீர்குலைக்கும். பீர் குடிப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், படுக்கைக்கு முன் பீர் அருந்துவதால், அழ்ந்த தூக்கம் கிடைக்காது. இரவில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டிய நிலை உண்டாம். இதன் காரணமாக, தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

7 /8

தினமும் பீர் உட்கொள்வது பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கல்லீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு மது அருந்துதல் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என தேசிய புற்றுநோய் நிறுவனம் கூறுகிறது. பீரில் உள்ள எத்தனால் டிஎன்ஏவை சேதப்படுத்துவதோடு, புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.