Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன?

Gluten Free Diet: பசையம் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். இந்த பொருள் உணவை கெட்டியாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாற்ற உதவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2024, 10:56 AM IST
  • பசையம் என்றால் என்ன?
  • பசையம் இல்லாத உணவு யாருக்கு நன்மை பயக்கும்?
  • இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன? title=

Gluten Free Diet: க்ளூட்டன் ஃப்ரீ டயட் என்ற கூற்றை நாம் பல இடங்களில் கேள்விப்படுகிறோம். சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றிய பேச்சில் இது இந்த நாட்களில் பல இடங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. க்ளூட்டன், அதாவது பசையம் என்றால் என்ன? பசையம் இல்லாத உணவு யாருக்கு நன்மை பயக்கும்? இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். பசையம் இல்லாத உணவுகளைப் பற்றியும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம். 

பசையம் என்றால் என்ன? (What is Gluten)

பசையம் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். இந்த பொருள் உணவை கெட்டியாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாற்ற உதவுகிறது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் சிலரின் உடல் பசையத்தை சரியாக ஜீரணிக்க முடியாமல் போகிறது. அவர்களுக்கு இது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

யாருக்கு பசையம் காரணமாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன?

- செலியாக் நோய் (Celiac Disease): செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். இதில் பசையம் உட்கொள்வதால் உடல் தன்னைத்தானே பாதித்துக்கொள்ளத் தொடங்குகிறது. இது சிறுகுடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. 

-  க்ளூட்டன் சென்சிடிவிடி (Gluten Sensitivity): சிலரின் உடலால் பசையத்தை ஜீரணிக்க முடியாது. செலியாக் நோய் தவிர, இது க்ளூட்டன் சென்சிடிவிடியின் காரணத்தினாலும் ஏற்படலாம். இவர்களுக்கு பசையம் உட்கொள்வதால் வயிற்று வலி, வாயுத்தொல்லை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பசையம் இல்லாத உணவின் நன்மைகள் (Benefits of Gluten Free Diet)

சிறந்த செரிமானம்

செலியாக் நோய் அல்லது க்ளூட்டன் சென்சிடிவிடி உள்ளவர்களுக்கு க்ளூட்டன் ஃப்ரேடயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வயிற்று வலி, வாயுத்தொல்லை, வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுதல்

செலியாக் நோயில், பசையம் சிறுகுடலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆகையால், இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பசையம் இல்லாத உணவு ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

ஆற்றல் அதிகரிப்பு

க்ளூட்டன் உள்ள உணவுகளை ஜீரணிக்க உடல் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், பசையம் இல்லாத உணவு செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது. இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இதை உட்கொள்வதன் மூலம் உடலில் அதிக ஆற்றலை உணர முடியும். 

எடை இழப்பு

பசையம் இல்லாத உணவை உட்கொள்பவர்கள் பெரும்பாலும் எடை இழக்கிறார்கள். பொதுவாக அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்கின்றஹது. இவை அனைத்திலும் பசையம் உள்ளது. இவை உடல் பருமனுக்கு காரணமாகின்றன. க்ளூட்டன் ஃப்ரீ டயட்டை ஒருவர் பின்பற்றும்போது இவை அனைத்தையும் சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால், எடை தானாக குறைகின்றது. 

மேலும் படிக்க | இந்த 5 பொருட்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன!

பசையம் இல்லாத உணவின் தீமைகள் (Side Effects of Gluten Free Diet)

- கோதுமை மற்றும் பிற தானியங்களை உட்கொள்ளாமல் இருப்பது நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். 
- ஆகையால், க்ளூட்டன் ஃப்ரீ டயட்டை பின்பற்றும் நபர்கள் தங்கள் உணவில் போதுமான அளவு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வழக்கமான உணவுகளை விட க்ளூட்டன் இல்லாத சிறப்பு மாவு மற்றும் ரொட்டி ஆகியற்றின் விலை அதிகம்.

அனைவரும் பசையம் இல்லாத உணவை உட்கொள்ளலாமா?

ஒருவர் தன்னுடைய உணவில் இருந்து அனைத்து பசையத்தையும் நீக்கினால், சத்தான முழு தானியங்கள், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை இழக்க நேரிடும் என ஹாப்ஸ்கின் மெடிசின் கூறுகிறது. குறிப்பாக நீங்கள் இதய நோய் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த டயட்டைப் பின்பற்றுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில் இந்த சூழ்நிலையில் முழு தானியங்களை போதுமான அளவு எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். முழு தானியங்கள் கொலஸ்ட்ராலுடன் உடல் சர்க்கரையையும் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, சில பசையம் கொண்ட உணவுகள் பி வைட்டமின்கள் போன்ற முக்கியமான வைட்டமின்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரங்களாகவும் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஐஸ் கட்டிகள் போல் காட்சியளிக்கும் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு குளிரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News