பலருக்கு, தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நேரமின்மை, சோம்பேறித்தனம் உள்ளிட்ட பல காரணங்கள் தடைகளாக இருக்கலாம். ஆனால், உடல் எடை அதிகரித்து, பருமனுடன் இருப்பதால் உடலுக்கு பல கெடுதல்கள் ஏற்படலாம். இதை தவிர்க்க, சில டிப்ஸ்களை நாம் உபயோகிப்பது மிகவும் முக்கியமாகும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?
1.சர்க்யூட் ட்ரைனிங்:
தசையை வலிமையாக்கி, உடல் எடையை குறைக்க நினைத்தால் இந்த் ட்ரைனிங்கை செய்யலாம். இது, ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகும். புல் அப்ஸ், புஷ் அப்ஸ், ஸ்குவாட் போன்ற உடற்பயிற்சிகளை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். இதனால், ஒரு வர்க்-அவுட்டிற்கு 500 முதல் 600 கலோரிகள் வரை குறையும்.
2.வயிற்றுக்கான உடற்பயிற்சிகள்:
தொப்பையை சீக்கிரமாக குறைக்க, நாம் வயிற்றுக்கான உடற்பயிற்சிகளை செய்வது முக்கியமாகும். இதையும் ஒரு வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். லெக் ரைசஸ், ப்ளாங்க், எல்போ ப்ளாங்க் ஆகிய உடற்பயிற்சிகள் இதில் அடங்கும். இதில், ஒவ்வொரு உடற்பயிற்சியையும் குறைந்தது 30ல் இருந்து 60 வினாடிகள் வரையாவது செய்ய வேண்டும்.
3.ஹெல்தியாக சாப்பிடுவது:
நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சிகளை எடுக்கையில் கண்டிப்பாக ஹெல்தியான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், தானிய ப்ரெட்கள், காய்கறி பாஸ்தா, சிக்கன், மீன், கொழுப்பு அல்லாத பால் உணவுகள் ஆகியவை உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும். அது மட்டுமன்றி, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் சர்க்கரை கலந்த உணவுகளையும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும்.
4.உப்பை தவிர்த்திடுங்கள்:
உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். சோடியம் அளவை எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், சுவைக்காக இயற்கை மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்
5.நிறைய தண்ணீர் பருகுங்கள்:
தண்ணீர் அதிகம் குடிப்பது, உங்கள் உடலில் இருக்கும் கெட்ட டாக்ஸின்ஸ்களை நீக்க உதவும். இதில் இரு பலன்கள் உள்ளது. ஒன்று, உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். இன்னொன்று உங்கள் வயிறு தட்டையாகி எடையும் குறையும். தண்ணீர் மட்டுமன்றி, கிரீன் டீ, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், ஆரோக்கியமான காய்கறிகள் ஆகியவற்றையும் சாறாக மாற்றி குடிக்கலாம்.
6.இதிலிருந்து தள்ளி இருங்க...
எடையை குறைக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆல்கஹாலில் இருந்து தள்ளியே இருப்பது அவசியமாகும். ஒல்லியான தேகத்திற்கு மதுவை விட்டு விலகியிருப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
7.மன அழுத்தம்:
உடல் நலனில் எந்த அளவிற்கு அக்கறை செலுத்துகிறீர்களோ, அதே அளவிற்கு மன நலனிலும் அக்கறை செலுத்துவது கட்டாயமாகும். சிலருக்கு மன அழுத்தம் இருப்பதால் கூட எடை கூடும். எனவே, உங்கள் மன நலனை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்.
மேலும் படிக்க | உடற்பயிற்சிக்கு நேரம் இல்லையா.. கவலை வேண்டாம்... ஆபீஸ் டெஸ்கே போதும்..!
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ