ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் வேலை செய்ததால் உயிர் இழந்துள்ளார். மாதம் ஒன்றிர்க்கு சுமார் 159 மணிநேரம் வேலை செய்ததே இவரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
2013- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானை சேர்ந்த மிவா சாடோ என்னும் அரசியல் பத்திரிகையாளர் இதய செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் கொடுத்துள்ள அறிக்கையினபடி மிவா அளவுக்கு அதிகமான பணிச்சுமை காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
மிவா, மாதம் ஒன்றுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொண்டு தெடர்ந்து பணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளார்.
சமிபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஜப்பானில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் காரணமாக சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் அரசாங்கம் இந்த விஷயத்தை தீவிரமாக ஆலோசித்து தீர்வினை தேடி வருகின்றது.