விரைவில் வரவுள்ளன 100 புதிய Airport-கள்! மக்களுக்கு கிடைக்கும் cheap Air travel!!

நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என தெரியவந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2024 க்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் ஹெலிபோர்ட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 02:00 PM IST
  • உடான் திட்டத்தின் நோக்கம் பிராந்திய விமான வழித்தடங்களில் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விமான சேவைகளை வழங்குவதாகும்.
  • விமான நிலையங்கள் நாடு முழுவதும் 285 விமான வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்கும்.
  • திட்டத்தின் திறனை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்- பிரதீப் சிங் கரோலா.
விரைவில் வரவுள்ளன 100 புதிய Airport-கள்! மக்களுக்கு கிடைக்கும் cheap Air travel!! title=

நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் (Airport) கட்டப்படும் என தெரியவந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2024 க்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள், நீர்வழிகள் (Waterdromes) மற்றும் ஹெலிபோர்ட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவற்றின் வளர்ச்சி பிராந்திய விமான இணைப்பு 'உடான்' (Udan) திட்டத்தின் கீழ் இருக்கும். அக்டோபர் 21 அன்று உடான் திட்டத்தின் நான்காவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

உடான் திட்டத்தின் நோக்கம் பிராந்திய விமான வழித்தடங்களில் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விமான சேவைகளை வழங்குவதோடு, விமான நிறுவனங்களுக்கும் இதை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாற்றுவதும் ஆகும்.

AAI இன் படி உடான் திட்டத்தை செயல்படுத்துவது அனைவரின் பொறுப்பு. இதற்காக, 2024 க்குள் நாடு முழுவதும் குறைந்தது 100 விமான நிலையங்கள், நீர்வழி விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபோர்டுகள் ஆகியவற்றை கட்டுவதற்கான லட்சியத் திட்டத்தை AAI கொண்டுள்ளது.

5 ஹெலிபோர்டுகள் உட்பட உடான் திட்டத்தின் கீழ் 50 குறைந்த சேவை அல்லது சேவையற்ற விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்கள் நாடு முழுவதும் 285 விமான வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்கும்.

சிவில் ஏவியேஷன் (Civil Aviation) செயலாளர் பிரதீப் சிங் கரோலா உடான் திவஸ் நாளன்று, இதனுடன் தொடர்புடைய அனைவரும், இந்த திட்டத்தை செவ்வனே செயல்படுத்த தங்களால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், திட்டத்தின் திறனை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

ALSO READ: உலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்? எங்க Entry allowed, எங்க not allowed: Check list!!

முன்னதாக மோடி அரசு உடான் திட்டத்தின் கீழ் 78 புதிய வழித்தடங்களை விமான சேவை மூலம் இணைப்பதாக அறிவித்திருந்தது. பிராந்திய இணைப்புத் திட்டமான உடானின் நான்காவது சுற்றில் மொத்தம் 78 கூடுதல் வழிகள் சேர்க்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதன் கீழ், பிலாஸ்பூர்-போபால் பாதை அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விமான சேவை விரைவில் தொடங்கப்படும். இவை தவிர, டெல்லி, கொல்கத்தா, கொச்சி ஆகிய இடங்கலிலிருந்தும் குறைவான பயன்பாடு கொண்ட 18 விமான நிலையங்கள் சேர்க்கப்படும்.

உடான் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் மூலம் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் விமான நிலையங்களிலிருந்தும் அவை பயணங்களை மேற்கொள்ள முடியும். மேலும், பயணிகளுக்கு மலிவான கட்டணங்களையும் அளிக்க முடியும்.

ALSO READ: இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News