பெங்களூரில் உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தை! அதிர்ச்சி தகவல்!!

இந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தின் தலைநகராமான பெங்களூரில் நிகழ்ந்துள்ளது. இதில், 11 மாதம் நிறைந்த ஆண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 8, 2018, 04:57 PM IST
பெங்களூரில் உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தை! அதிர்ச்சி தகவல்!! title=

இந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தின் தலைநகராமான பெங்களூரில் நிகழ்ந்துள்ளது. இதில், 11 மாதம் நிறைந்த ஆண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகராமான பெங்களூரில் அமைந்துள்ள புலிகேசி நகர் என்ற இடத்தில் 11 மாதம் நிறைந்த ஆண் குழந்தை ஒன்று வீட்டினுள் விளையாடி கொண்டிருந்தது. 

அப்போது எதிர்பாரத விதமாக அந்த குழந்தை, தரையில் இருந்த மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த மீனை எடுத்து வாயில் போட்டது. 

இதனால் குழந்தையின் வாயில் இருந்து அதிக அளவு ரத்தம் வழிந்தது. மேலும் மூச்சு விடவும் சிரமப்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

எனவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையை உடனடியாக மருத்துவத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வயிற்றிலிருந்த மீனை மருத்துவர்கள், என்டோஸ்கோபி மூலம் வெளியே எடுத்தனர். 

மருத்துவர்களின் இந்த துரிதசெயலுக்கு குழந்தையின் பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News