பரோலில் வெளிவந்த மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி மாயம்!

21 நாள் பரோலில் வெளிவந்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 17, 2020, 10:03 AM IST
பரோலில் வெளிவந்த மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி மாயம்! title=

21 நாள் பரோலில் வெளிவந்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரான ஜலீஸ் அன்சாரி தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பரோலில் வெளிவந்துள்ள அவர் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகக் கூறப்படும் ஜலீஸ் அன்சாரி, “டாக்டர் வெடிகுண்டு” என்றும் அழைக்கப்படுகிறார். நாட்டை உலுக்கிய குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட ஜலீஸ் அன்சாரி தற்போது மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், வியாழக்கிழமை காலை அவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அக்ரிபாடா காவல் நிலையத்தில் அவர் '' காணவில்லை '' என்ற அடிப்படையில் புகார் ஒன்று அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில், அன்சாரியின் நான்கு மகன்களில் ஒருவரான ஜைத் வியாழக்கிழமை காலை முதல் தனது தந்தையை காணவில்லை என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட குண்டு குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜலீஸ் அன்சாரியைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறையினர் பல அணிகளை அனுப்பியுள்ளனர்.

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான அன்சாரிக்கு ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மத்திய சிறையில் தனது தண்டனையினை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பரோலில் வெளிவந்துள்ளார். பரோல் காலத்தில், அன்சாரி ஒவ்வொரு நாளும் தனது வருகையை குறிக்க அக்ரிபாடா காவல் நிலையத்திற்கு செல்லுமாறு பணிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி மும்பை நகரில் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், மேலும் 713 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News