பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் சென்ற ஒரு வாகனத்தை இரு சிங்கங்கள் முற்றுகையிட்டு விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
காரின் முன் புறம் ஏறுவதற்கு ஒரு சிங்கம் முயற்சி செய்கிறது. அந்த கார் நகரும் போது, அதை நகர விடாமல் தடுக்க இரு சிங்கங்களும் முயற்சி செய்கிறது. எனினும் அந்த கார் டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டினார். ஒரு ஆண் சிங்கம் அந்த காரை பின்னால் விரட்டிக் கொண்டே ஓடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இந்த பூங்கா நிர்வாகம் சார்பில் 8 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த இனொவா காரை மட்டும் அந்த சிங்கங்கள் குறி வைத்து தாக்க முயற்சித்ததாக புகார் எழுந்தது. இது வரை மூன்று முறை அந்த காரை சிங்கங்கள் தாக்க முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளன.