டெல்லியில் 500 இடங்களில் இலவச வைபை

Last Updated : Jun 25, 2016, 11:13 AM IST
டெல்லியில் 500 இடங்களில் இலவச வைபை title=

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் இலவச வை-பை வசதி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கிழக்கு டெல்லியில் 500 இடங்களில் கட்டணமில்லா வை-பை வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என டெல்லி அரசு நேற்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமல்படுத்தும். இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தெரிவித்துயுள்ளனர்.

இதன் மூலம் டெல்லி மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி தகவல்களை பதிவிறக்கம், பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். 

Trending News