புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பஞ்சாபின் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்களில், ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் உணவுகளை ஏற்றிக்கொண்டு தேசிய தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்கள்.
ஜீ நியூஸிடம் பேசிய மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர் சத்னாம் சிங் பன்னு, விவசாயிகள் 'இறந்தாலும் பரவாயில்லை’ என்ற நோக்கத்துடன் புதுடெல்லிக்கு வருகிறார்கள் என்று கூறினார். "எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்பதால் எங்களை எவ்வாறு கொல்வது என்று மோடி அரசு முடிவு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஃபெரோஸ்பூர், பாசில்கா, அபோஹர் ஃபரித்கோட் மற்றும் மோகா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் புதுடெல்லிக்கு (New Delhi) புறப்பட்டு விட்டதாகவும், ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்துடனான டெல்லியின் பல மாநில எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) 16 வது நாளாக தொடர்ந்தது.
நாடு முழுவதும் இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் திட்டங்களை விவசாயத் தலைவர்கள் வகுத்து வருகிறார்கள். டிசம்பர் 12 மாலைக்குள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து (Haryana) இன்னும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு எல்லையில் அவர்களுடன் இணைவார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூர் நுழைவு இடத்தில் அணிவகுத்து நிற்கும் விவசாயிகள், டோல் பிளாசாக்களில் தர்ணங்களை நடத்துவதாகவும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு குறிப்புகளை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர்.
தனது ஆதரவாளர்களுடன் காஜிப்பூர் எல்லையில் அணிவகுத்து போராடும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட்,”டிசம்பர் 12 ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்." என்று கூறினார்.
இந்த எதிர்ப்பு மத்திய அரசு (Central Government) மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இருக்கும்.
"டிசம்பர் 14 ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிபதிக்களுக்கும் எங்கள் ஆதரவாளர்கள் எங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிப்பார்கள். இவை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்படும். மூன்று புதிய வேளான் சட்டங்களை அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று அவ்ர மேலும் தெரிவித்தார்.
விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் (Farmers Protest) ஈடுபட்ட விவசாயிகள் தினமும் காலை 11 மணிக்கு `கிசான் கிரந்தி பேரணியை’ நடத்துவார்கள் என்றும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ளும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காசிப்பூர் எல்லையில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி
நாட்டின் உயிர் நாடியாக இருக்கும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமான விஷயங்களாகும்.
மத்திய அரசாங்கமும்இது குறித்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாய பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளும் தங்கள் போராட்டங்களில் மற்ற தேச விரோதிகள் குளிர் காயாதவாறு கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் போர்வையில் சில மக்கள் விரோத சக்திகள் வன்முறையை தூண்ட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருவதால், உண்மையான போராட்டமும், நியாயமான கருத்துகளும் வன்முறையின் கீழ் மறைக்கப்படுவதற்கும் மிதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கம், விவசாயிகள் என இரு தரப்பினரின் ஒருமித்த எண்ணம் என்பதில் சந்தேகமில்லை.
ALSO READ: Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR