பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்தும் வகையில், ஒசூரில் வான்வழி அமைப்புகளுக்கான மையம் (CABS) அமைக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 2024 தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (GIM 2024) முதன்முதலில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து நிலம் ஒதுக்கப்பட்டு, அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இதற்கான கட்டுமானப் பணிகள் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலின் இந்த அரசு நிறுவனமும், இந்தியாவின் DCX Systems நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ELTX Systems Pvt Ltd என்ற கூட்டு நிறுவனம் மூலம் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூளகிரி தொழிற்பேட்டையில் சுமார் ரூ.850 கோடி முதலீட்டில் இந்த புதிய உற்பத்தி வளாகம் அமையவுள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாபெரும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2027 ஏப்ரலுக்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்த மையத்தில் வான்வழி radars மற்றும் தரைவழி கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தயாரிக்கப்படவுள்ளன.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்புத் துறையில் மிக வலுவான நட்புறவு இருந்து வருகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள்கள் என Israel Aerospace Industries-இன் தயாரிப்புகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்களின் முக்கிய மையமாக வளர்ந்துள்ள ஓசூர், இனி பாதுகாப்பு உற்பத்தித் துறையிலும் உலக வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பெறவுள்ளது. 2027 முதல் ஓசூரில் தயாராகவிருக்கும் இஸ்ரேலிய radars, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு புதிய அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
Tata Group iPhone Facility: ஆப்பிள் சாதனங்களுக்கான உதிரிபாகங்களை (எ.கா. பின்பக்க பேனல்கள்) தயாரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள டாடா குழுமத்தின் ஐபோன் உதிரிபாக உற்பத்தி ஆலை, கழிவுநீர் வெளியேற்றத்தால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கட்டாயமாக மூடப்பட வேண்டிய சூழலை எதிர்கொண்டுள்ளது.
Salem News: ‘பவானி பைபாஸ் டூ துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.. கட்டணம் 10,000 ரூபாய் மட்டும்’- இப்படி ஒரு அரசு பேருந்து டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் நடந்தது? விவரம் இங்கே!
ஓசூரில் அடுத்த அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது! குடியிருப்பு பகுதியில் கஞ்சா புகைத்த சிறுவர்கள் சிதறி ஓட்டம், முற்றுப்புள்ளி வைக்குமா போலீஸ்? அச்சத்தில் மக்கள்!
Hosur Latest News Updates : குடிநீர் சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படாததை கண்டித்து ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
Tamil Nadu Crime News : காவல்துறையில் பணியாற்றும் பெண்ணிடம், அவரது கிராமத்தைச் சேர்ந்த நபரே அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தின் முழு பின்னணியை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஓசூர் அருகே, தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை அப்பகுதி மக்களே வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Krishnagiri Crime Latest News: ஒசூர் அருகே உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் காதலனான திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தற்போது போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் தை மாத பவுர்ணமி மற்றும் சிறப்பு பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
அறிவுசார் வழித்தடம் எக்களுக்கு தேவை இல்லை! - அதிகாரிகளுடன் மக்கள் கடும் வாக்குவாதம்!
Hosur Airport Plan: ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு துறை அனுமதி மறுத்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hosur Airport News: ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Hosur Airport: ஓசூர் விமான நிலையம் அமைவதில் குழப்பம் நிலவி வந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில், 12 கிராமங்களில் 2,980 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஓசூரில் கிறிஸ்துமஸ் மற்றும் திருமண விழாவிற்க்காக கேரளா மாநிலத்திற்கு தினமும் 2 லட்சம் வெள்ளை மற்றும் கலர் ரோஜாக்கள் அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
Hosur New Airport: ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (34) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, நிலம் வாங்கப் பேசுவதாகக் கூறி அழைத்துக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூரில் டீக்கடையில் வேலை செய்தவர் ஆந்திரா ஏரியில் பிணமாக மீட்பு
Hosur International Airport: ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியில் அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது.
ஒசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் எம் எல் ஏ, மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
Bangalore Hosur Metro Service: பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்பது செயல்படுத்த சாத்தியமில்லாதது என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருப்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.