புதுடெல்லி: நாட்டின் தலைநகரான தில்லியின் (Delhi) ராணிபாக் (Ranibagh) பகுதியில், நெய்பர்ஹுட் வூஃப் (Neighborhood Woof) என்ற NGO-வுடன் தொடர்புடைய ஒரு பெண்ணும் (Woman) அவரது 3 கூட்டாளிகளும் அடிக்கப்பட்டு அவர்களது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. தெரு நாய்கள் தொடர்பாக துவங்கிய வாக்குவாதம் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது. போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 10:30 மணிக்கு, ராணிபாக் பகுதியின் ரிஷி நகரில் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போலிஸ், சம்பவ இடத்தை அடைந்தது. Neighborhood Woof என்ற NGO-வைச் சேர்ந்த சிலர், இரவில், அப்பகுதியில் இருந்த தெரு நாய்களைப் பிடிக்க (Stray Dogs) வந்ததாகத் தெரிய வந்தது. இரவில் இப்படி வந்ததால், அப்பகுதி மக்களுக்கு அவர்களின் மீது சந்தேகம் வந்துள்ளது. அவர்களிடம் பலவித கேள்விகளைக் கேட்ட மக்கள் அடையாள அட்டையைக் காண்பிக்கும் படி கேட்டுள்ளனர்.
வாக்குவாதம் பெரிதாகி இரு தரப்பிற்கும் இடையே மோதல் துவங்கியுள்ளது. NGO-வுடன் தொடர்புடையவர்கள், கூட்டம் அதிகமாக சேர்வதைப் பார்த்தவுடன், அங்கிருந்து சென்றுவிடுவதுதான் மேலானது என எண்ணினர். ஆனால், அவசரத்தில் அங்கிருந்து கிளம்ப முற்பட்டதில், அவர்களது காரில் அப்பகுதியைச் சேர்ந்த மூவர் இடிபட்டனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் பின்னர், ஆயிஷா கிறிஸ்டினா என்ற NGO பெண்மணியையும் அவரது கூட்டாளிகளான விபின், அபிஷேக் மற்றும் தீபிகா ஆகியோரையும் அடித்த மக்கள் அவர்களது காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆய்ஷாவின் புகாரின் பேரில் போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மஞ்சீத், ஹர்மேந்திரா மற்றும் குருப்ரீத் ஆகியோருக்கும் மோதலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து, தில்லி பெண்கள் ஆணையத் தலைவர், ‘வாயில்லா மிருகங்களுக்காக பணி புரியும் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுடன் தில்லி பெண்கள் ஆணையம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. இப்போது போலீஸ் வழக்கை பதிவு செய்துள்ளது’ என ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ: ஊருக்குள் விட மறுத்த கிராம வாசிகள்.... குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் தங்கிய பெண்..!