8-மாத குழந்தைப் பாலியல் பலாத்காரம்-வழக்கு!!

இச்சம்பவம் தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 8-மாத குழந்தைப் பாதிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jan 31, 2018, 03:28 PM IST
8-மாத குழந்தைப் பாலியல் பலாத்காரம்-வழக்கு!! title=

இச்சம்பவம் தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 8-மாத குழந்தைப் பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, தங்கள் வீட்டினுள் இருந்த அச்சிறுயை கடந்த ஞாயிற்றுக்கிழமை 28 வயதான உறவினர் ஒருவர் தனியாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார், பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை அலறியுள்ளார்.

இச்சம்பவத்தால் வேதனைக்குள்ளான அக்குழந்தையை கண்ட பெற்றோர்கள் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த 28 வயதான நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றம் முன்பு அமர்வுக்கு வந்தது. பின்னர், இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கினை நாளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், விசாரணையில் அவர் ஆல்கஹால் குடித்ததாக தெரிகிறது.

Trending News