"இராணுவ வீரருக்கு ஒருபோதும் ஓய்வு இல்லை" என்ற பொன்னான வாரத்தைக்கு ஏற்ப கேரள மாநிலத்தில் வெள்ளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக விடுமுறையில் உள்ள ஒரு இராணுவ வீரர், தனது விடுமுறையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காக பணி செய்து வருகிறார். "இராணுவ வீரருக்கு ஒருபோதும் ஓய்வு இல்லை" என்ற பொன்னான வார்த்தைகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்களில் இருந்த மேஜர் ஹேமந்த் ராஜ் கேரளவுக்கு சென்றார். அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னை போல விடுப்பில் உள்ள வீரர்களுடன் சேர்ந்து, உள்ளூர் மீனவர்களின் உதவியோடு படகுகள் ஏற்பாடு செய்தனர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி உள்ளார். இவரின் இந்த செயல் பலர் பாராட்டி வருகின்றனர்.
இதுக்குறித்து ராஜஸ்தான் இராணுவ பாதுகாப்பு நிவாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ட்வீட் செய்துள்ளார். அதில், ஒரு இராணுவ அதிகாரி ஒருபோதும் கடமையை தட்டி கழிப்பதில்லை. தன் விடுப்பை தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்காக பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார்.
A Soldier is never off duty. Maj Hemant Raj 28 MADRAS Sapth Shakti Comd #IndianArmy flew to Kerela on leave. Imdtly threw himself into #KeralaFloodRelief work. Organised team of Defence persons on leave,veterans & local fishermen boats to help marooned people. Working tirelessly. pic.twitter.com/v1kzbRYHEP
— PRO Defence Rajasthan (@PRODefRjsthn) August 22, 2018