அவசர மூலதன செலவுகளை சமாளிக்க ஏர் - இந்தியா விமான நிறுவனம் வங்கிகளிடம் 1,500 கோடி ரூபாய் கடனை கோரி உள்ளது.
இது குறித்து, ஏர் - இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:- அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்ய 1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடன் தேவைப்படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.
விருப்பமுள்ள வங்கிகள் கடன் தொகையை குறிப்பிட்டு 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.