Train Ticket Booking Rules | இந்திய இரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. அந்தவகையில், ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக மூத்த குடிமக்கள் தாத்தா பாட்டி உள்ளிட்டோர் ரயிலில் பயணிக்கும்போது கீழ் பெர்த் அவர்களுக்கு தேவைப்படும். அந்த சீட் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் முன்பதிவின்போது செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து புதிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புக் செய்தால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும். அந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வே புதிய விதிமுறை
மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் பயணத்தை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மூத்த குடிமக்களுக்கு வசதியாக கீழ் பெர்த்களை முன்பதிவு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக ஒதுக்குவது பற்றி IRCTC புதிய விதிமுறை மூலம் தெரிவித்துள்ளது. பயணி ஒருவர் தன்னுடைய மாமாவுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ததாகவும், கால்களில் பிரச்னை இருந்ததால் கீழ் பெர்த்துக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும், ஆனால் அப்போதும் ரயில்வே அவருக்கு மேல் பெர்த் கொடுத்ததாகவும் பயணி ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்பதிவு செய்வது எப்படி?
பயணிகளின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும் என்று எழுதியுள்ளது. இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. லோயர் பெர்த் ஒதுக்க வேண்டும் என முன்பதிவின்போது தேர்வு செய்தால் மட்டுமே லோயர் பெர்த் கிடைக்கும். எனவே அந்த விதிமுறைப்படி டிக்கெட் புக் செய்யவில்லை என்றால் மூத்த குடிமக்கள் என்றாலும் லோயர் பெர்த் கிடைக்காது.
லோயர் பெர்த்கள் பொதுவாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முதல் சேவை அடிப்படையில் கிடைக்கும்.இருப்பினும், நீங்கள் TTE-யை லோயர் பெர்த்துக்கு அணுகலாம். லோயர் பெர்த்துக்கு உங்களுடன் பயணிக்கும் சக பயணிகளிடம் நீங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம். அப்போது லோயர் பெர்த் கிடைத்தால் கிடைக்கும்.
மேலும் படிக்க | IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும்
மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ