புதுடெல்லி: ஜனவரி 27, 2022 அன்று ஏர் இந்தியா பங்கு விற்பனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் கேபின் குழு பணியாளர்கள் அமைப்புக்கு புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சில நாட்களில் டாடா குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் கேபின் குழு பணியாளர்கள் அமைப்புக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஒவ்வொரு கேபின் குழு உறுப்பினரும் 4 மாதங்களுக்கு ஒருமுறை பிஎம்ஐ மற்றும் எடை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சீரான வகையில், விதிமுறைகளின்படி நன்கு உடையணிந்து கேபின் குழுவினர் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதால், இந்த நடவடிக்கை முக்கியமானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ | விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!
மேலும் புதிய உத்தரவின்படி, விமான குழுவினர் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை விமானத்தின் கேபின் மேற்பார்வையாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும், பணியாளர்களை விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் மேற்பார்வையாளர் உடனடியாக இது குறித்த தகவலை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய அறிவிப்புக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"பிஎம்ஐ என்பது கிலோகிராமில் உள்ள ஒரு நபரின் எடையை மீட்டரில் அவரது உயரத்தின் சதுரத்தால் வகுக்கப்படுகிறது. அதிக பிஎம்ஐ அதிக உடல் கொழுப்பைக் குறிக்கிறது" என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு போட்டி ஏலத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமத்திடம், விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க சில நாட்களுக்கு முன்பாக, ஜனவரி 20, 2022 தேதியிட்ட இந்த உத்தரவு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR