500 ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்... டாடா நிறுவனம் அதிரடி!

ஏர்பஸ் முதல் போயிங் விமானம் வரை பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 500 ஜெட்விமானங்களுக்கு ஏர் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஆர்டரை வழங்க உள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2022, 05:46 PM IST
  • டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா ஒரு முக்கிய கொள்முதல் செய்ததாக பல அறிக்கைகள் வந்துள்ளன.
  • விமான நிறுவனங்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
  • டாடா நிறுவனம் 1932 ஆம் ஆண்டில் ஜேஆர்டி டாடாவால் நிறுவப்பட்டது.
500 ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்... டாடா நிறுவனம் அதிரடி! title=

ஏர்பஸ் முதல் போயிங் விமானம் வரை பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 500 ஜெட்விமானங்களுக்கு ஏர் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஆர்டரை வழங்க உள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. 18,000 கோடி ($180 பில்லியன்) ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டாடா குழுமம் இந்திய அரசாங்கத்திடமிருந்து விமான நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில், டாடா குழுமம் சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடனான அதன் கூட்டு முயற்சியான விஸ்டாராவுடன் ஏர் இந்தியாவை இணைப்பதை அறிவித்தது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் குறிப்பிடத்தக்க இருப்பை உருவாக்கியது. இந்த ஆர்டரில் குறைந்தது 400 குறுகிய உடல் அமைப்பு கொண்ட ஜெட் விமானங்கள் மற்றும் பல ஏர்பஸ் A350 கள் மற்றும் போயிங் 787 கள் மற்றும் 777 ரக விமானங்கள் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தம் கையெழுத்தானால், இது வரை இல்லாத அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டராக இருக்கும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 460 க்கும் மேற்பட்ட ஏர்பஸ் மற்றும் போயிங் ஜெட் விமானங்களை வாங்கி இருப்பது இது வரை உள்ள மிகப் பெரிய ஆர்டராக உள்ளது.

இருப்பினும், கணிசமான  தள்ளுபடிகள் இருந்தபோதிலும்,இந்த விமானங்களை வாங்க நிறுவனத்திற்கு $100 பில்லியன் டாலர்கள் செலவாகும். பெருகி வரும் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு மத்தியில் COVID-19 தொற்று நோய் கட்டுப்பாடுகளை எளிதாக்கியதைத் தொடர்ந்து, பயணிகளில் தேவை பெரிதலவு அதிகரித்துள்ளதால், பெரிய விமானங்களின் தேவை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | ரூ10000 ஸ்பெஷல் ஆஃபருடன் ஓலா ஸ்கூட்டரை 'இலவசமாக' வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்

கூடுதலாக 500 ஜெட் விமானங்களை வாங்குவது இறுதி செய்யப்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய விமான போக்குவரத்து ச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக விரிவுபடுத்தும் நோக்கத்தில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா நிறுவனம் 1932 ஆம் ஆண்டில் ஜேஆர்டி டாடாவால் நிறுவப்பட்டு, பின்னர் தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து கடன்களில் தத்தளித்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. டாடா குழுமம், கையகப்படுத்தும் நேரத்தில், ரூ. 2,700 கோடி ($27 பில்லியன்) ரொக்கமாக செலுத்தியது. அதோடு, விமான நிறுவனத்தின் கடனில் ரூ.15,300 கோடி ($153 பில்லியன்) க்கு மேல்  பொறுப்பேற்றுக் கொண்டது.

இதுவரை, டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா ஒரு முக்கிய கொள்முதல் செய்ததாக பல அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால் நிறுவனமும் விமான நிறுவனங்களும் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

மேலும் படிக்க | ரூ.1 லட்சம் தள்ளுபடி விலையில் ஸ்கோடா கார்! வோல்ஸ்வேகன்-ம் அதிரடி விலை குறைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News