புது டெல்லி: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அளவுகள், இனி 18+ வயது நிரம்பிய அனைத்து தரப்பினருக்கும் ஏப்ரல் 10 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செய்திகள்: மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 08) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் பூஸ்டர் டோஸ்கள் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டன.
அதாவது 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் முடித்தவர்கள், தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை டோஸுக்கு தகுதியுடையவர்கள்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தடுப்பூசி போடாதவர்களுக்கு இனி வரி!
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் டோஸ்கள் தற்போது தனியார் நோய்த்தடுப்பு மையங்களில் கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 9 மாதங்கள் முடித்தவர்கள் தனியார் நோய்த்தடுப்பு மையங்களில் முன்னெச்சரிக்கை மருந்தைப் பெறத் தகுதியுடையவர்கள். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களு முன்போல தொடரும் மற்றும் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Precaution Dose to be now available to 18+ population group from 10th April, 2022, at Private Vaccination Centres.https://t.co/lmnT0NQXyN pic.twitter.com/U49UVJAPUt
— Ministry of Health (@MoHFW_INDIA) April 8, 2022
நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தது சுமார் 96 சதவீதம் பேர் முதல் COVID தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 83 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசியும் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானோரருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும்! ஊழியர்களுக்கு உத்தரவு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR