வாஜ்பாய் வீடு அமித் ஷாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீடு, தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்!!

Last Updated : Jun 7, 2019, 11:03 AM IST
வாஜ்பாய் வீடு அமித் ஷாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்..!! title=

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீடு, தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, அவரது பதவிக்காலத்துக்கு பின்னர் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2004 ஆம் ஆண்டில் அங்கு வசித்து வந்த வாஜ்பாய், அவரது மரணம் வரை அங்கேயே இருந்தார். அவரது இறப்புக்குப்பின் அவரது குடும்பத்தினர் கடந்த நவம்பர் மாதம் அந்த வீட்டை காலி செய்தனர். தற்போது அந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த வீடு தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ணா மேனன் மார்க் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார்.  2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக வாஜ்பாய் அங்கு வாழ்ந்துவந்தார்.  இந்நிலையில், தற்போது அந்த வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவருமான அமித் ஷா குடியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஜ்பாய் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்த வீட்டை காலிசெய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டைப் பார்வையிட்ட அமித் ஷா, அங்குதான் வசிக்க வேண்டும் என விருப்பப்பட்டு, வீட்டில் சில மாற்றங்களைச் செய்யக் கூறியுள்ளார். அதன்படி, தற்போது அந்த வீட்டில் சில வேலைகள் நடந்துவருகின்றன. 

வாஜ்பாயைத் தவிர வேறு சில தலைவர்களும் அந்த வீட்டில் வசித்துள்ளனர். வாஜ்பாய்க்கு முன்னதாக அங்கு தி.மு.க-வின் முரசொலி மாறன் தங்கியிருந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வீடு காலி செய்யப்பட்டது. வாஜ்பாய் தன் வீட்டு எண்ணை மாற்றியதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பி.வி. நரசிம்ம நாவ் பிரதமாக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, மன்மோகன் சிங்கும் ஐந்து வருடங்கள் கிருஷ்ணா மேனன் மார்க் வீட்டில் வசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News