அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச உதவி எண்களை ஆந்திரா அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!!
ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில முதல்வர் Y.S.ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் புகார்களை பதிவு செய்ய பொது மக்கள் உதவி மையத்தை தொடங்கியுள்ளது. ஆந்திர முதல்வர் குடிமக்களின் ஹெல்ப்லைன் எண் 14400-ஐ அறிமுகப்படுத்தினார். எந்தவொரு குடிமகனும் இந்த கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். இதில், அரசாங்க அலுவலகங்களில் ஊழல் குறித்து புகார் அளிக்கலாம். அதன் செயல்பாட்டை சரிபார்க்க ரெட்டி தானே ஹெல்ப்லைன் எண்ணை அழைத்தார். உதவி மையம் புகார்களை பதிவு செய்து விசாரணையை 15-30 நாட்களில் முடிக்கும்.
குடிமக்கள் உதவி மையதின் செயல்பாட்டை சரிபார்க்க ஜெகன் மோகன் ரெட்டி தானே ஹெல்ப்லைன் எண்ணை (14400) அழைத்தார். ஹெல்ப்லைனில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சுவரொட்டிகளையும் வெளியிட்டார். அந்த சுவரொட்டியில் ஊழலை ஒழிக்க கைகோர்ப்போம்," "ஊழலை காணும்போதெல்லாம் உங்கள் குரலை உயர்த்துங்கள் ", "ஊழலை ஒழிக்கவும், ஆந்திராவை வளமாக்கவும்", "ஆந்திராவை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்" உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன
அரசுத்துறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 14400 என்ற லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.