கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ஆந்திர மாநிலம் அரசு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது....!
கடந்த 10-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, கடவுளின் தேசம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான வெள்ளப் பாதிப்புகளை சந்தித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 50,000 மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொச்சி அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையின் காரணமாக இதுவரை 324-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர் என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 94 வடங்களில் இல்லாத பேரழிவைத் தற்போது கேரளா சந்தித்துவருகிறது.
நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் மீட்புப்பணிகளும் நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில்
கேரளா வெள்ள நிவாரண நிதியாக ஆந்திர மாநிலம் 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
Andhra Pradesh CM N Chandrababu Naidu has announced an aid of Rs 10 crores for the flood-hit Kerala. (File pic) pic.twitter.com/b7UobMaFmN
— ANI (@ANI) August 17, 2018
வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளா மாநில பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது...!