டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் 2 மருத்துவ மாணவர் பலி: 2 நாட்களில் 3 மரணம்...

'சிக்னேச்சர்' பாலத்தில் அதிவேகமாக சென்ற போது, 'செல்பி' எடுக்க முயன்ற, இரண்டு மருத்துவ மாணவர்கள் பரிதாப பலி....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2018, 12:39 PM IST
டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் 2 மருத்துவ மாணவர் பலி: 2 நாட்களில் 3 மரணம்...  title=

'சிக்னேச்சர்' பாலத்தில் அதிவேகமாக சென்ற போது, 'செல்பி' எடுக்க முயன்ற, இரண்டு மருத்துவ மாணவர்கள் பரிதாப பலி....

டெல்லி சிக்னேச்சர் பாலம் (Signature Bridge...) இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறி விட்டது. இதன் பிரம்மாண்டம், காண்போரைக் கவர்ந்திழுத்து வருகிறது. ஒரு முறையாவது, பாலத்தில் பயணம் போகலாம் என்று நினைப்பவர்கள் செய்யும் சாகசம் தான் இப்போது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படியெல்லாம் செல்ஃபி மோகம் ஆட்டுவிக்கிறதே என்று, அச்சப்பட வைத்துள்ளது.

இந்த பாலம், சுமார் 14 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த பாலத்துக்கு, 2007 ஆம் ஆண்டு தான் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வட கிழக்கு டெல்லியையும், காஜியாபாத் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில், யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத்தில், இந்த பாலம், பிரம்மாண்டமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.  

மேலும், 2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 2013 ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 2017 ஜூலை முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, நீண்டு கொண்டே சென்ற நிலையில், தற்போது தான் பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்க டெல்லி அரசு சார்பில் ஆயிரத்து 344 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 154 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் காண்பவர்களை கவரும் ஈர்க்கும் வகையில் உள்ளது. கிழக்குப் பகுதியில் 1 புள்ளி 8 கிலோமீட்டர் தூரமும், மேற்குபகுதியில் 1 புள்ளி 5 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கிய இந்த பாலத்தில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தின் மேல் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 பேர் செல்லும் வகையிலான 4 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த பாலத்தில் செல்ஃபி மோகத்தால் நிறைய உயிர்சேதமும் ஏற்பட்டு வருகிடது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலத்தில் இன்று இன்னொரு இரு சக்கர வாகன விபத்து நடந்துள்ளது. விபத்தில் வாகன ஓட்டி உயிரிழந்துள்ளார். 

நேற்று, சிக்னேச்சர் பாலத்தில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தினால், வாகனத்தில் வந்த 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இன்னொரு விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், விபத்து நடந்த இடத்தில் பதற்றம் நிலவுகிறது. 

இன்று 24 வயதாகும் ஷங்கர் மற்றும் 17 வயதாகும் அவரது உறவினர் தீபக் ஆகியோர், நாங்கலோயிலிருந்து வட கிழக்கு டெல்லிக்கு, சிக்னேச்சர் பாலம் மூலம் பயணப்பட்டுள்ளனர். காஸியாபாத்தைச் சேர்ந்த இருவரும் விபத்தில் சிக்கியதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஷங்கர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

 

Trending News